பக்கம்:அமுதவல்லி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162 அமுத வல்லி

‘டோட்டல் ரூவா நூத்தி எண்பது, பைசா பதினைஞ்சு வருது சோமையா’

பள்ளிக் கணக்கு புள்ளிக்கு உதவவில்லையா இங்கே?

நல்ல காலம்: க்ரைண்டரின் குரல் வளையைப் பிடித்து விட்டான் எடுபிடி,

‘ கரெக்டுங்க, முதலாளி!’ என்று பெருமிதம் பொங்கிய வெற்றிச் சிரிப்பைச் சிந்தியவாறு, கண்களைத் தாழ்த்தி சட்டைப் பைக்குள் கையை நுழைத்தான் சோமையா.

மறுகணம்;

‘ஆ’ என்று வீரிட்டான் சோமையா.

ஐயோ, தேள் கொட்டி விட்டதா, என்ன? செட்டியார் விழித்தார்.

சோமையாவும் தான் விழிக்கிறான். வேர்வை ஆழப்புனலென ஓடுகிறது. கண்களைக் கட்டிக் காட்டில் விட்டமாதிரி இருக்கிறது தவிக்கிறான். விதி இருந்திருந்து தன்னோடுதான் கண்ணாமூச்சி ஆட வேண்டுமா? இனிமேலும்?-ஐயோ, ஆறுமுகப் பெருமானே! .

'சோமையா!’

கண்கள் பொடித்திட ஏறிட்டுப் பார்த்தான் சோமையா“ஐயா, இதோ நிமிஷத்திலே வர்றே னுங்க,” என்று சொல்லி டார்ச் லைட்"டை எடுத்துக்கொண்டு பறந்தான். பறந்தவன் திரும்பிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/164&oldid=1378116" இலிருந்து மீள்விக்கப்பட்டது