பக்கம்:அமுதவல்லி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164 அமுத வல்லி

செட்டியாருக்குத் தன்னுடைய ‘ட்ரேட் மார்க்’ நெடுமூச்சைக் கொட்டி அளப்பதைத் தவிர, வேறு மார்க்கம் ஏதும் பிடிபடவில்லை போலிருக்கிறது!

“வாங்க, அத்தான்!”

உயிரை உயிரால் வரவேற்பது போலவே வரவேற்றாள் தில்லை நாயகி. ஒளியில் மிதந்தாள், மஹாலஷ்மியாக!...

ஊம்’ என்று ஒப்பனைக்குத் தலையை உலுக்கிவிட்டு சாரை யாகப் படி, தாண்டி இரண்டாம் கட்டில் வந்து நின்றான் சோமையா. கால்கள் தரையில் பாவ ஒப்பவில்லை. துடித்தான்; துடியாய்த் துடித்தான். தரை மீன் துடிக்கும் பாருங்கள். அந்தப் பாங்கில்!

மனத்திற்கு மனம்தான் சாட்சி என்பார்கள்.

அந்த மனம் சாட்சி வைத்து-சாட்சி சொல்லிச்

சுட்டதோ அவனை? துவள் கிறானே சோமையா!பாவம் ! .

பாவமாவது, புண் ணியமாவது!...

அவன் பிழையோ அன்றி, விதியின் பிழையோ பிழை ஒன்று என்னவோ நடந்தது நடந்துவிட்டது. முதலாளிச் செட்டியாருக்குச் சேர வேண்டிய அவருடைய பணம் ரூபாய் நூற்று எண்பது, பைசா பதி னைந்தையும் சோமையா ஏமாந்துவிட்டான். அவன் ஏமாந்த தவற்றுக்காக செட்டியார் ஏமாற முடியுமா? ஏமாறுவாரா? மேற்படி தொகை சோமையாவின் கடன் சுமையோடு சுமையாக ஏறிவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/166&oldid=1439706" இலிருந்து மீள்விக்கப்பட்டது