பக்கம்:அமுதவல்லி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 165

ஒரு தவறு நடந்தது போதாதா?

சோமையா தவித்தான். பட்ட சூடு இருதயத்தைத் தகித்தது. மனச்சான்றின் ரணம் ரத்தக் கண்ணீராக மாலை தொடுத்தது. தில்லை!... தில்லை! நெஞ்சின் பாரம் அற்ப சொற்ப மல்லவே? ஆகவே, மண்டை வலித்ததில் வியப்பு இல்லை தான். திருக்ஷ் டியைத் திசை திருப்பினான்.

அங்கே -!

பார்வதி புன்னகையும் புது நிலவுமாக அதோ, ‘தரிசனம் தந்து கொண்டிருக்கிறாள்!

படத்தைச் சுற்றிலும் புதிய பூ மாலை! அவன் அறிந்த கதை தான் இது!

தில்லை நாயகி புதிய பதவி ஏற்று இந்த வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்த நாள் முதலாக, பார்வதி"க்கு நித்த நித்தம் மலர் மாலை இட்டு, தானும் கும்பிட்டு தன் பாபுவையும் கும்பிடச் செய்து வருகிறாள் தில்லை நாயகி:

சோமையாவின் ஆன்மா ஊசலாடியது. தில்லை : தி ல்லை!... அவன் தன்னுணர்வு கொண்டான்; முகத்தை டவலால் துடைத்தான்; புன்சிரிப்பை வரவழைத்துக் கொள்ளவும் தவறிவிடவில்லை. “தில்லை!” என்று கூப்பிட்டான்.

தூண்ணோடு தூணாக சிந்தனை வயப்பட்டு நின்ற தில்லை நாயகி ஓடி வந்தாள். குறுஞ் சிரிப்பும் துணை வந்தது. அத்தான், உங்களைப் பார்க்கிறதுக்கே எனக்குப் பயமாய் இருந்திச்சு; அதனாலேதான் ஒதுங்கிட்டேன்!’ என்றாள், குறும்புச் சிரிப்புடன். “உடம்புக்கு ஒண்ணுமில்லீங்களே?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/167&oldid=1378195" இலிருந்து மீள்விக்கப்பட்டது