பக்கம்:அமுதவல்லி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166 அமுதவல்லி

தாலிக்கயிற்றில் ஆடிய தாலிப்பொட்டை ஆட்டி விட்டான் சோமையா. ‘சும்மா தலைவலி அவ்வளவு தான்!” என்று கூறினான். போலித்தனமான ஒரு சிரிப்பு கைகொடுத்தது. வேறென்ன செய்வான்? நான் ஒருத்தன் அனுபவிக்கிற வேதனை போதாதா? அவள் வேறேயா கஷடப்படனும்?

அந்தத் தாலி எவ்வளவு ஒயிலோடு சிரிக்கிறது.

ஏன் அப்படி?

சோமையா தத்தளித்தான். தாலியைக் கோர்த்துப்போட ஒரு தாலிச்சங்கிலி செய்துவிட வேண்டுமென்று எவ்வளவு ஆசைப்பட்டான் ! பார்வதி அணிந்திருந்த அந்த ஒன்றரைப் பவுன் தாலியை அழித்து சன்னமான ஓர் ஒற்றை வடச் சங்கிலி செய்து அதில் தாலியை இணைத்து, தில்லைக்குப் போட்டு அழகு பார்க்கலாமென்பது அவன் எண்ணம், ஆனால், தில்லை நாயகி ஒப்பமறுத்தாள். கடன் பிரச்னைகளைப் பகுதி பகுதியாகக் கட்ட முயலலாம்! -மார்ச் மாதத்திய சீட்டுக் குலுக்கலில் கொசிறு’ தள்ளி ஏலம் எடுத்தால், எப்படியும் குறைந்தபட்சம் முந்நூறுக்குத் தேறிவரும். தாலிச் சங்கிலி செய்து விடலாம். ஆனால், சோதனையாக இப்போது அனாமத்தாகவும் அனாவசியமாகவும் அநியாயமா கவும் ரூபாய் நூற்றி எண்பதும் சொச்சம் விரயமாகி விட்டதே! இந்த லட்சணத்தில் குனா- பானா கெடு பிடிக்கு எப்படி மால் பண்ணுவதாம்? நூற்றி இருபது ரூபாய்ச் சம்பளத்தில் எப்படிக் குடும்பம் நடத்திக் குப்பை கொட்டுவதாம்? ஆறுமுகப் பெரு மானே...!

“அத்தான்!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/168&oldid=1378216" இலிருந்து மீள்விக்கப்பட்டது