பக்கம்:அமுதவல்லி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ்.ஆறுமுகம் 15

கிறேன்!" என்று பேசி நிறுத்தினாள். அவ்வளவு தான்!-நாற்புறமும் கசமுச வென்னும் ஒலி எழத் தொடங்கியது. டைரக்டர் ரமேஷ், கதாநாயகன் இந்திரஜித், படத் தயாரிப்பாளர் புதுமை வேந்தன், திரைப்படத் தீயோன் வீரநாயகம் ஆகிய எல்லோரும் அமுத வல்லியை மொய்த்தனர். கைகளைப் பிசைந்து கொண்டு வேண்டுதல் விடுத்தனர்.

"ஒரு திருத்தம்! விரைவில் நடக்கயிருக்கின்ற என்னுடைய திருமணத்துக்குத் தாங்கள் வரும்போது, அவசியம் இந்தப் பரிசுகளை நான் பெருமையோடு வாங்கிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். மூன்றாம் முறையாக என் நன்றியையும் வணக்கத்தையும் தெரியப்படுத்திக் கொள்ளுகிறேன்!" என்றாள் அமுதவல்லி,

கூடியிருந்தோரின் கண்கள் கண்ணிர் விடலாயின! அது ஆனந்தக் கண்ணிர்!

அவள் மாடிப்படிகளைக் கடந்தபோது, தலை வாயிலில் புகைப்படமொன்று இருந்தது. முதலிரவுக் காட்சி அது,

அவள் சிரித்தாளா? சினந்தாளா ? சிந்தித்தாளா!

'அம்மா...அம்மா!'

புதுக் கருக்குக் கெடாத பட்டு மெத்தை அலங் கரித்த அந்தக் கட்டில் அப்படியே கிடக்க, அந்தக் கிழவி கைகளைத் தலைக்கு அணைவாக வைத்துக் கொண்டு ஏனோ தரையில் படுத்துக் கிடந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/17&oldid=1180478" இலிருந்து மீள்விக்கப்பட்டது