பக்கம்:அமுதவல்லி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168 அமுதவல்லி

தர்மமாகுமா? எங்க ரெண்டு பேர் ஜீவனும் எங்க பாபு கையிலே தான் இருக்குது என்கிற துப்பு உனக்குப் புரியாததா, என்ன?' என்று நெக்குருகிக் கதறினாள்.

சோமையா சுய நினைவை மீட்டுக் கொண்டான். அமைதியான கவலை துலங்கிட, 'பாபுவோட சேட்டை வர வர ஜாஸ்தி ஆகிட்டுத் தான் வருது: அடிச்சால்தான் படிவான். சரி, சரி நீ போய்ச் சாப் பாடு ரெடி பண்ணு, தில்லை!” என்றான்.

பாபுவின் புத்தகம் இடறியது! தில்லைக்கென்று அப்படியொரு சிரிப்பா?...

அதோ, பார்வதி!.

பார்வதியை-பார்வதியின் அமரப் புன்னகையை தொடுத்தவிழி எடுக்காமல் பார்த்தான் சோமையா. பார்வதி விதியாகச் சிரிக்கின்றாளா? அவளுடைய கழுத்துத்தாலி அவன் உள்ளத்தில் ஊசலாடியது. நெஞ்சு வலியெடுத்தது. பற்றிக்கொண்டான் கெட்டியாக, அந்தத் தாலியைக் காணத் துடித்தது அவன் மனம். உயிர் பிரிந்த பார்வதியை மீண்டும் உயிரும் உயிர்ப்புமாகத் தரிசிக்கப் போகும் பாக்கியம் பெற்றவனைப்போல ஓடினான். ஓடின விழி வெள்ளத்தை, ஓட்டி விடக் கூட சிந்தை இழந்தான் அவன்.

அலமாரி வாய் பிளந்து கிடந்தது,

அடங்காத-அடிக்க முடியாத ஆர்வத் துடிப்போடு அலமாரியின் அடித் தட்டைத் துழாவினான் சோமையா. அத்தான் பார்வதி அக்காளுடைய இனிய ஞாபகத்துக்கும் அமர நினைவுக்கும் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/170&oldid=1376656" இலிருந்து மீள்விக்கப்பட்டது