பக்கம்:அமுதவல்லி.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172 அமுத வல்லி

யடி வலிக்காதா, பின்னே? மார்பைப் பற்றிக் கொண்டான். இப்போது தான் அவனால் தில்லை நாயகியை வேண்டும்!...தி.ல்...லை... நாயகி!’

அந்தத் தில்லை நாயகி ஜாதி ரோஜாவாகச் சிரித்தாள். பூவும் பொட்டும் சிரித்தன. எடுப்பான மார்பகத்திலே எடுப்பாக ஊசலாடிக்கிடந்த அந்த தங்கத் தாலி-வெறும் கயிற்றில் பந்தம் கட்டிப் பொலிந்த அந்தச் சுமங்கிலியின் அந்தத் தாலியும் தான் சிரித்தது!

மறு கணம்:

“அத்தான்!...”

தில்லை நாயகி ஏன் அப்படி விம்மித் துடிக்கிறாள்?

சோமையா மீண்டும். ‘ஆ’ என்று கூவலானான்.

தில்லை நாயகியின் மாணிக்கக் கரங்களிலே இப்போது பார்வதியின் அழகான தாலி தரிசனம் கொடுத்தது!...

தூண்டிற் புழு என்று உவமை காட்டிப் பேசுவார்களே அது இவ்வாறு தான் அல்லற்பட்டு, அவதிப்பட்டு, அலைக்கழிக்கப்பட்டுத் துடிக்கமோ? ஐயோ!...

"தில்லை!...”

அவளுக்கென்று இப்படியொரு அலாதிச்சிரிப்பா, என்ன?-"அத்தான், நீங்க என்னைக் கைப்பிடிச்சுக் கொஞ்ச காலம் தான் ஆகியிருக்குது; ஆனால், இந்தக் குறுகின காலக்கெடுவுக்குள்ளே நீங்க மெளனமாச

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/174&oldid=1378247" இலிருந்து மீள்விக்கப்பட்டது