பக்கம்:அமுதவல்லி.pdf/181

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளதுபூவை எஸ். ஆறுமுகம்

179

‘ரொம்ப நன்றி, ஸார்!’

“போப் வர்றேன், தாரா.” ‘நல்லதுங்க.”

அந்தியில் அவள் நிழல் சிறுகச் சிறுகத் தேய்ந்து கொண்டிருந்தது.

சூழ்ந்திருந்த மயான அமைதி முகுந்தனை விரட்டி யது. மூன்றாம் மாடியிலிருந்து பாய்ந்தோடினான்

கெடிலாக் புறப்படவிருந்த சமயத்தில் மழை புறப்பட்டு விட்டது. எட்டிப் பார்த்தான். கண்ணாடிக் கதவுக்கு நந்தியாக நடிக்க மனமில்லை. டம்பப் பையும் கையுமாக தாரா நின்றிருந்தாள்.

இரக்கம் ஒரு விலங்கு-அல்ல, அது ஒரு சிலந்தி வலை. எங்கோ படித்ததை ஏன் அவன் எண்ணிப் பார்த்தான்? அதே சடுதியில் ஏன் அதை மறக்கவும் யத்தனம் செய்தான்?

“தாரா. மழை வேறு வந்துவிட்டதே?... என் னுடன் காரில் வருகிறாயா?... உன்னை மயிலாப் பூரில் கொண்டுவிட்டு அப்புறம் அடையாறு போய்க்கொள் கிறேன். அது தானே எனக்கு வழியும் கூட?...”

அவள் சிரிப்புக்கு இணக்கம் என்று அர்த்தம்.

மழைச் சரங்களினூடே கார் பறந்தது. புஷ்பக விமானமாக தெரு விளக்குகளின் அடியிலேயே வெளிச்சத்தைப் பிரித்துக் காட்டியவாறு இடைநின்ற தெருக்கள் விடைபெற்றுக் கொண்டன. நடைபாதை வாசிகள் தம்பதி சமேதராகப் பின்னிப் பிணைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/181&oldid=1459995" இருந்து மீள்விக்கப்பட்டது