உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமுதவல்லி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



180

அமுத வல்லி

கிடந்தனர். அவனுக்கோ, அவளுக்கோ அவர்களைப் பற்றி அக்கறை கிடையாது. ஆனால், அவர்கள் அவனைப் பற்றி, அவளைப் பற்றி அக் கறைப்பட்டார்கள். பேச்சு வளர்ந்தது: ‘ஏ பொண்ணு, என்னா அப்பிடிப் பாத்துக்கிணே நிக்கிறே? பாவம். ஒங் கொள்ளிக்கண்ணு அவங்க மேலே வுளுந்திடப் போவுது... புதுக் கண்ணாலம் போலே!...”

கார் திரும்பியது. அவனுடைய இடது கைக் கடிகாரத்தில் அவளுடைய வலதுகை மோதிரம் உரசி விட்டது. கார் நின்றது. சைனா பஜார் நின்றது! புஹாரி முகமன் சொன்னது.

"சாயா இரண்டு!”

எதிரும் புதிருமாக பாதரவி விளக்கில் மிதந்தார் கள். ‘டை எம்பி விழுந்தது. நைலான் புடவையை விட்டு வெளியேறத் துடித்த வண்ணாத்திப் பூச்சிகள் எம்பி எம்பிச் சிறகடித்துப் பறந்தன. விசைக் கதவுக் குறும்பு ஜாஸ்தி. ‘குடும்ப அறை’ என்ற எழுத்துக்களைக் காட்டியது.

சிகரெட்டின் ஒரு முனையில் நெருப்பும், இன் னொரு முனையில் முட்டாளும் இருப்பதாகச் சொன் னானே, யாரோ ஒருவன்?

கபாலீஸ்வரர் ஆலயத்தில் புனிதம் இருந்தது. முகுந்தன் கும்பிடக் கைகளைத் தூக்கினான். நடுங் கின. நல்ல வேளை, பிழைத்தான். கார் ஓடிக் கொண்டிருந்தது.

“நீங்களும் வாணியும் தானே இன்றைக்குப் படத்திற்குப் போகப் போகிறீர்கள். அத்தான்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/182&oldid=1459996" இலிருந்து மீள்விக்கப்பட்டது