பக்கம்:அமுதவல்லி.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம்

181
“ஆமாம்’
“உங்கள் இரண்டு பேருக்கென்றுதான் பிடித்த மழையும் நின்றுவிட்டது.’
"ம்"
“அத்தான். நான் கூட படத்துக்கு வரட்டுமா?”
“ஓ! வாயேன்? ஏன், நீயும் நானும் இப்படியே திரும்பி விடுவோமா?”
“ஓ!...”*
‘ஒ. இது!”
இரு ஜோடிக் கண்களுக்கு அப்படி என்ன தான் மாளாத பேச்சோ!... முகுந்தன் காயகல்பம் சாப்பிட வில்லை. சிறுவன் . ஆனான். மணல் வீடு தோன்றி. யது. அப்போது அவன் உள்ளத்தில்- உடலில் வித்திடப்பட்ட ஒர் இன்ப வெறி -- -
“தாரா!’
“அத்தான், அத்தான் காரை நிறுத்துங்கள், நான் இங்கேயே இறங்கிக் கொள்ள வேண்டும். தலை வலி தாள முடியல்லே. குட்நைட், அத்தான் !’
வாணி விலாசத்திற்கு வந்துதான். முகத்தில் புது வெள்ளமாகப் பெருகிய வியர்வையை துடைத்துக் கொண்டான் முகுந்தன்.
வாணி! வாணி!”
“இதோ வந்திட்டேன், அத்தான்!'
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/183&oldid=1459997" இலிருந்து மீள்விக்கப்பட்டது