பக்கம்:அமுதவல்லி.pdf/185

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளதுபூவை எஸ். ஆறுமுகம்

183

துன்பத்திலும் இன் பத்திலும் நோயிலும் தே காரோக் கியத் தி லும், உலகின் எந்தத் தாக்குதல்களிலும் இணை பிரியாதது!’

அப்படியா?

வாழ்க்கையிலே காதலில் வெற்றி கண்டவர் களுக்கு அது ஒரு பூலோக சுவர்க்கம்; தோல்வி அடைந்தவர்களுக்கு அது ஒரு நரகக் குழி!

பொய்! பொய்! பொய்!

முகுந்தனுக்கு உலகம், வாழ்க்கையெல்லாம் அப்பொழுது நர கக்குழியாகத்தான தோன்றியது.

அழகுக்குப் பதவுரை சொல்லும் ஆருயிர் மனைவி இருந்தாள். எம். ஏ. பட்டத்திற்குப் பலன் சொன்ன அந்த இங்கிலீஷ் கம்பெனியின் மானேஜர் பதவி இருந் தது. கெடிலாக், இருந்தது. வாணி இருந்தாள், அன்பு மனைவியாக. எல்லாம் இருந்தது- ஆனால், காதல் இல்லை ! தாரா இல்லை!

சூன்யம் நையாண்டிச் சிரிப்புச் சிரித்தது: பெண்கள் மணவறையில் அமரத் துடிப்பார்கள். ஆண்களோ, திருமண வினையினின்றும் எவ்வளவு துாரம் எவ்வளவு காலம் விலகிவிட முடியுமோ, அவ்வளவு வரை விலகியேயிருப்பார்கள்!

தாரா!

அவள் அவனுடைய உரிமைப் பெண். பிஞ்சுக் கரங்கள் கட்டிய அன்பு மணல் வீட்டை காதல் அத்தாணி மண்டபமாக நிர்மாணித்து விடவேண்டு மென்று பொழுதெல்லாம் கனவு கண்டார்கள், ஒரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/185&oldid=1459999" இருந்து மீள்விக்கப்பட்டது