பக்கம்:அமுதவல்லி.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

அமுதவல்லி

கல்லூரியில் கூட்டுப்படிப்பு- எம். ஏ. காதல் என்ற ஒன்றே அவர்களது தாரக மந்திரமாக அமைந்தது. வாழ்க்கையையே காதலாக்கிவிடப் பார்த்தார்கள். காதலையே வாழ்க்கையாக்கிவிடத் துடித்தார்கள், காதலில் தோற்றவன் உளறிக் கொட்டிய கவிதைகளை எண்ண அலைகளைத் தேடிப்பிடித்துக் கிழித்தெறிந்தார்கள். காதலில் வெற்றி கண்டவனின் அனுபவ மொழிகள் அவர்கள் வரைப் பொன் மொழிகளாயின. திருமண நாள் வந்தது - ஆனால், திருமண வேளை வரவில்லை. முகுந்தன்-தாரா இருவரும் தம்பதியானால், அவர்களில் ஒருவர் இன்னெரு. வரை வெகு சீக்கிரமே இழந்துவிட நேரிடுமாம். காதல் தோற்றது. தோற்கடிக்கப்பட்டது,

வாணி!- கானலாகி விட்ட அவனுடைய வாழ்வின் அன்பூற்றாகத் தோன்றினாள். இனிய பாதிஉயிர்த்துணை-மனை விளக்கு போன்ற முத்திரைகள் அவள் தாலிச் சரட்டில் மின்னின. .

முதல் இரவு வந்தது. ‘வாணி, நீ என் மனைவி. என்னுடன் இரத் தத்தோடு இரத்தமாக, உயிரோடு உயிராக, உணர்வோடு உணர்வாகப் பின்னிப் பிணைந்திருக்க வேண்டியவள்- நீ என் மனைவி, உயிர், உலகம்! இது என் இரண்டாம் காதல். கலியாணத்திற்குப் பிறகுதான் சிலருக்குக் காதல் கணிபு. மாம்-நாம் இந்த ரகம். உன்னிடம் நான் எதையும் மறைக்கவிரும்பவில்லை. என் முதற் காதல் தோற்று விட்டது. மறந்துவிட மாட்டாயே?- நீ தான் நான்; நான் தான் நீ...!’

வாணி புதுமைப் பெண்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/186&oldid=1460000" இலிருந்து மீள்விக்கப்பட்டது