பக்கம்:அமுதவல்லி.pdf/191

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 189


வந்திருக்கிறது. அதிர்ச்சி தரும் விஷயம் எதுவுமே ஏற்படாமல் இருந்தால் நல்லது. நீங்கள் கவலைப் பட்டு விடாதீர்கள். இரண்டு மூன்று நாட்களில் குணமாகி விடும்" என்று உத்தாரம் சொன்னார். உடற்பரிசோதனைக் குழலும் பாசக் கயிறும் ஒன்றுக் கொன்று எதிரான இரு துருவங்கள் ஆகாதவரை உலகம் பிழைத்துவிடும்.

   டாக்டர் காப்பியைச் சுவைத் துப் பருகினார். முகுந்தனுக்குக் கசந்தது.
   "டாக்டர், வாணிக்குக் காப்பி கொடுக்கலாமல்லவா?"
   “கூடாது, கூடாது பித்தம்!”
   பித்தம் தெளிய மருந்தாகி வந்தவளுக்குப் பித்தம்!-உரிமை பூண்டவனின் கண்கள் உரிமைக் காரியின் கண்களை ஊடுருவின. கண்களின் கரையில் அமைதிக் கொடி பறந்தது. அவனுக்கு நல்ல மூச்சு வந்தது.
   ஒன்பதாம் முறையாக ஒலித்த டெலிபோன் மணி, சூழலின் அமைதியைக் கலைத்தது. மனத்திற்காவது, அமைதியாவது..?
   “ஆமாம், சரிதான்!ம்..இன்றைக்கே தபாலில் அனுப்பிவிட வேண்டும். சங்கரனின் கையெழுத்துப் போதும். லண்டனுக்குப் போய் பதில் வரணும்! ம்.. வாணிக்கு இப்போது பரவாயில்லை. நன்றி!’
   பற்களைக் கடித்தான். தாரா பஸ்பமானாள்!
   “அத்தான்"
   "ம்!"
   "யார் பேசினது?"
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/191&oldid=1377769" இருந்து மீள்விக்கப்பட்டது