பக்கம்:அமுதவல்லி.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190 அமுதவல்லி


   "ஆபீஸிலேருந்து"
   "உங்க சொந்தக்காரப் பெண் தாராவா?"
   “ஊஹூம் இல்லே. என்னோட அஸிஸ்டெண்ட்”
   “அத்தான், நீங்க போய்ச் சாப்பிடுங்க. மணி மூணுக்கு மேலாயிடுச்சு."
   "ஆகட்டும், வாணி! கொஞ்ச நேரம் கண்ணை மூடு, கண்னே?”
   “அத்தான், என்ன சொல்றீங்க?”
   "ஆ!..தூங்கச் சொன்னேன், வாணி!”
   "எனக்கு உயிரே போயிடும் போலிருந்திச்சு...”
   “வாணி நிம்மதியாகத் தூங்கினால்தான் உடம்புக்கு நல்லது!...”
   “உங்களுக்கும் நல்லது..."
   “ஆமாம்..."
   “அப்படியானா; நான் பாயும் படுக்கையுமானது உங்களுக்கு வீண் தொல்லை தானே? ...” .
   "வாணி, ஜுர வெறியிலே ஏதேதோ பிதற்றுறாயே? எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும். நீ இப்படி கிண்டிக் கிண்டி மறுமுறையும் கேட்டால்!...”
   “அத்தான், நீங்கள் என் பக்கத்திலேயே இருக்கிறதாலே தான் எனக்குப் பைத்தியம் பிடிக்காமல் இருக்குது...! உங்களை என் நெஞ்சிலே வச்சுப் பூஜிக்க போன ஜன் மத்திலே நான் ரொம்பப் புண்ணியம் செஞ்சிருக்க வேணும்.”
   "கண்ணே உன் மாதிரி ஒருத்தி என் மனைவியாக வர்றதும் என் பூஜாபலன் தான்"
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/192&oldid=1377782" இலிருந்து மீள்விக்கப்பட்டது