பக்கம்:அமுதவல்லி.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 191


   “அத்தான்!”
   "வாணி!"
   இரவு வந்தது. நிலவு வர வில்லை.
   கண்ணோடு கண் பொருத்தவில்லை இருவரும்.
   “அத்தான். பக்கத்துத் தெரு பங்கஜத்தை அவள் புருஷன் விலக்கி வைத்து விட்டாராமே...?"
   “ஊர்க் கதையெல்லாம் நமக்கு எதற்கு, வாணி? நீ தூங்கமாட்டாயா? ..."
   “நீங்கள் தூங்குங்கள் ...!” ஆகட்டும்; முதலில் நீ தூங்கு.”
   “சரி ...! அத்தான், நான் பூவும் மஞ்சளுமாக என்றைக்கும் இருப்பேனல்லவா?..."
   “நிச்சயமாக!”
   “உங்கள் நிழலில் ஒண்டும் பாக்யம் எனக்கு எப்போதும் கிடைக்குமல்லவா?"
   “நிச்சயமாக!” “என்னை நீங்கள் மறந்திடமாட்டீங்களே?..." 
   "நீல வானம் நிறைமதியை மறக்கமுடியுமா?"
   
   “நீங்கள் ரொம்ப அழகாகப் பேசறீங்க!” 
   
   "நீ ரொம்ப அழகாக இருக்கே!" 
   
   “அத்தான், இதுக்கு மட்டும் பதில் சொல்லிப்பிடுங்க, நான் தூங்கிப்பிட்றேன். உங்கள் மேலே எனக்குள்ள உரிமை என்னிக்கும் திருடு போகாமல் இருக்குமில்லையா?”
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/193&oldid=1377796" இலிருந்து மீள்விக்கப்பட்டது