பக்கம்:அமுதவல்லி.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194 அமுதவல்லி


கண் உறங்கிக் கொண்டிருந்தது. ‘இனம்' காண முடியவில்லை. முகம் மடித்து வைக்கப்பட்ட கரங்களில் புதைந்து கிடந்தது. 'ஆராரோ' பாட ஆசைப்பட்டானோ, என்னவோ? சதி விரதன் என்றால்-

   எழுத்துகள் பூதாகாரமாகத் தெரிந்தன. 'உனக்கு மேலே பேரும் அழகா இருக்கேன்னான். நான் ஒண்ணும் அழகில்லேன்னேன். நீயா, நீயா, நீயான்னு கிட்ட வந்து .’
   மலரை மூடினான். திரும்பிப் பார்த்தான். உடம்பில் சூடு; நெஞ்சில் சூடு; நினைவில் சூடு.
   வாணி அன்றைக்கு சாவின் தலைவாசலில் நின்ற போது கூறினாளே, அதை இப்போது திரும்பவும் நினைவுபடுத்தினான். "அத்தான், எனக்கு உள்ள உரிமை என் உயிருள்ள வரை பறிபோவதை - பிறரால் பறிக்கப்படுவதை நான் சகிக்கமாட்டேன். இன்னொன்று. நளாயினி கதை எனக்கு இஷ்டப்படுவ தில்லை. தன் கணவனின் மிருக இச்சையைப் பூர்த்தி செய்ய வேண்டி, தன் புருஷனை -தீராத நோயாளிக் கணவனை-அவன் விரும்பிய தாசி வீட்டுக்குத் தூக்கிச் சென்றாளாமே? நிலைநிறுத்தப்பட்ட கற்பின் கதைக்குக் கை தொழுகிறேன். ஆனால் அவள் தன் உரிமையை இழந்ததை..சே! சே!...அத்தான், நீங்கள் என் சொத்து-உரிமை!"
   பூகம்பமாக நடுங்கியது உடம்பு.
   அழகி புரண்டாள்; அழகு வெள்ளம் கால்வாய் கட்டி நுங்கும் நுரையுமாகக் கொப்புளித்துக் கொண்டிருந்தது. யார், தாராவா?
   அழகுச் சொக்கட்டானின் தீ நாக்குகள் பராசக்தியாக எரிந்து கொண்டிருந்தன. யார், வாணியா?
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/196&oldid=1377827" இலிருந்து மீள்விக்கப்பட்டது