பக்கம்:அமுதவல்லி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196 அமுத வல்வி

     “தாரா’ என்று அழைத்தான். புனிதம் மாறாமல் கிடந்தது ரோஜா. அவன் கண்கள் அவளைத் துழாவின. ‘ஆ’ என்று கூச்சல் போட்டான். நெற் றியிலிருந்து கீழ்நோக்கிப் பாய்ந்தோடி வந்த குருதித் துளிகள் ஒவ்வொன்றாக அந்த மஞ்சள் கயிற்றின் மேல் விழுந்து, பிறகு வெட்டி விடப்பட்ட கால்வாய் வழி மண்ணை முத்தமிட்டுக் கொண்டிருந்தன.
  தஞ்சைச் சந்திப்பு நிலையத்திலே அவன் ரத்ததானம் செய்து கொண்டே கிறுக்குப் பிடித்தவன் போல ஓடினான். வாணி ஓட ஓடத் துரத்தினாலோ?

வாணி! வாணி

கால் இடறி விட்டது.

“அத் தான்!”

‘ஆ’ என் வாணி! என் வாணி! நீ கூட இந்தப் பாழும் புயலிலும் மழையிலும் அகப்பட்டுக் கொண்டு விட்டாயா?. நேற்று இரவு உலகம் பேயாகியிருந் ததே? ஐயோ!...” - -

 அத்தான், உங்களை உடனடியாகப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. ரயிலேறி விட்டேன். உலகத்தில் எங்கோ தவறு, அநீதி நடந்திருக்க வேண்டும். இல்லையென்றால், இயற்கைத் தாய் இப்படிச் சீறியிருக்கவே மாட்டாள். நாம் இருவரும் நல்லபடி சந்தித்தோமே, என் தாலி பாக்கியம் தான்!” என்று சொல்லித்.தன் தாலியைப் பக்தியுடன் கண்களில் ஒற்றிக்கொண்டாள் வாணி.

பிரகதீஸ்வரர் கோயிலில் உதய காலப் பூஜை நடந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/198&oldid=1378549" இலிருந்து மீள்விக்கப்பட்டது