பக்கம்:அமுதவல்லி.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10.

சாலையிலே ரெண்டுமரம்!....

‘கண்ணு முழி ரெண்டையும் தொறந்துப் புட்டியா?...’ என்று ஆர்வத்தின் தடுமாற்றத்துடன் கேட்டுக்கொண்டு வந்து நின்ற அந்தப் புது இளவட்டத்தை நொடிப் பொழுது இமை பரவாமல் பார்த்த செம்பவளம், மறுகணம் பேயடி பட்டவள் மாதிரி பொறி அதிர்ந்து எழுந்து, சுற்றும் முற்றும் பரிதாபமாக விழித்துப் பார்த்துவிட்டு, அதே சடுதியில், "ஆத்தாடியோ!... நானு மோசம் போயிப்புட்டேனே!.ஐயையோ!,. ஆத்தாளே!" என்று ஒலம் பரப்பலானாள்! பட்ட காலிலே படுவது போன்று படர்ந்து கிடந்த உவர்க் கோடுகளிலேயே கண்ணிரின் புதிய கோடுகளும் அழுத்திப் பதிந்தன. காதுப்புறங் களை ஒட்டிச் சரிந்து விழுந்த சுருள் அலைக் கேசங் களைத் தலையை உலுக்கி ஒதுக்கிவிட்டாள் அவள். முன் போலவே, நாற்புறமும் கண்களை ஒட்டினாள். ஒட்டி விட முடியாத நீள் மூச்சும் ஒட்டிக்கொள்ள முடியாத விதியும் அவளது பேதை நெஞ்சத்துக்குப் புயலாயினவோ?

கணங்கள் சில ஊர்கின்றன!

பேய்க்கணங்களா அவை?

செம்பவளம் ஏறிட்டு விழித்துப் பார்த் தாள். மேனி அசதி திருகி முறுக்கியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/200&oldid=1460005" இலிருந்து மீள்விக்கப்பட்டது