பக்கம்:அமுதவல்லி.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

201

பூவை எஸ்.ஆறுமுகம்


படப்பின் தலைப்பில் வழி மறித்து நின்றான் அவன் இரைப்பு மிஞ்சியது.வேர்வை எஞ்சியது.

“என்னை வழி மறிக்கிறதுக்கு நீ... நீங்க யாராம்: எம்பிட்டு விதியைத் தேடிக்கிட்டு நானு போய்க்கிட்டு இருக்கிறேன் ! என்னை வழி மறிச்சு நிக்கிறது க்கு ஒங்களுக்கு என்னா அதிகாரம் இருக்குது? நீங்க யாருங்குறேன்?...”

பத்திரகாளியா அவள் ?

அவள் கண்கள் கொவ்வைப் பழங்களாயின. எரி தழலின் செம்மையை அவை ஏற்றிருக்க வேண்டும்.

வெந்தணல் அவள் நெஞ்சில் இடம் கண்டு நாழிகை ஐந்தாறு இருக்குமே!

அவன் அன்பு திறை செலுத்திய விழிகளால் அவளைப் பார்த்தான். கண்ணிர் திரையிட்ட கண்கள் அவளையே சுற்றின. ‘நானு யாருன்னுதானே கேக்கிறே? நானு ஒரு மனுசன்! அம்புட்டுத்தான்!” அவன் நாதழுதழுத்தது.

நீங்க மனுசன் என்கிறது. மெய்தானுங்க, ஐயா... ஆனா, நானு அனாதைச் சென்மமா ஆயிப்பிட்டேனுங்க; அபலைப் பொண்ணா ஆகிப்புட்டேனுங்க! நானு இனிமே இந்த மண்ணுக்குச் சுமை கல்லாட்டம் தானுங்க. ஆனபடியாலே, என்னை இனிமேயும் தடுத்து நிறுத்தாதீங்க; அதுக்கு ஒங்களுக்கு அதிகாரமும் கெடையாதுங்க. ஆமாங்க, நறுவிசான தாக்கலுங்க, ஐயா!’

அவள் பேசிக் கொண்டே, அவன் குறுமறுக்காக நீட்டிய தார்க்குச்சியையும் மோதித்தள்ளி விலக்கியவஅ-13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/203&oldid=1377755" இலிருந்து மீள்விக்கப்பட்டது