பக்கம்:அமுதவல்லி.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

அமுதவல்லி


 டான். அரைக் கணத்தில் அவன் நிலை மாறியது பின்வாங்கிக் கொண்டான்.

காளியப்பனின் வைரக்கட்டு கூடிய மேனியை மறுமுறையும் பார்த்தாள் செம்பவளம். கம்பீசமும் ஆண்மையும் அன்பின் பண்புடன் பொலிந்தன; மனிதாபிமானம் குழைந்த அம்முகத்தை அவள் நம்பினாள். அ.ண்.ணா...ச்.சி என்று ஒவ்வொரு எழுத்தையும் கூட்டிப் போட்டு, ஒரே குரலில் கூவிவிட எண்ணியவளின் .ெ ந ஞ் சி ல், ‘'சொல்லப் போனா, குத்தமில்லை! என்னை நம்புலே நீ! என்ற குற்றச் சாட்டும், அக்குற்றத்தின் அநியாயம் போல ஒலித்த தேம்பலும் மட்டையடியாக விழுந்தன. எண்ணியதை மறந்தாள்.

‘எம் பேரு செம்பவளம்!” என்று செப்பினாள். செம்பவள உதடுகள் துடிப்புச் செய்தன. தெய்வச் சிலையை பார்ப்பதை நினைந்து, அவனைப் பார்த்தான். அவனுடைய கண்ணீர் அவளுக்கு நம்பிக்கை ஆயிற்று!

அவன் ஜீவனுடன் சிரித்தான்!

அந்தி மயங்கிவிட்டது.

‘இப்ப நானு என்ன செய்யணும்?

‘ஏங்கூட எம்புட்டுக் குடிசைக்கு நீ வர வேண்டும்!”

“வந்து’

“எஞ்சோத்துப் ப ரு க் கை ைய ச் சாப்பிட வேணும்!”

‘சாப்பிட்டுப்புட்டு..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/208&oldid=1378177" இலிருந்து மீள்விக்கப்பட்டது