பக்கம்:அமுதவல்லி.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ் ஆறுமுகம்

207



“ அப்பாலே ஒம் மனசுப்படி செஞ்சுக் கிடலாம்!’ ‘ மெய்யாலுங் காட்டியா?”

‘ஆமாலே! நம்பு புள்ளே!’

புள்ளே யா?”

‘நம்பு செம்பவளம்’

“எங்க நாட்டுப்புறத்திலே புள்ளேன்னாக்க’ பொஞ்சாதியைத் தான் சுட்டும். கொண்டவளைக் கொண்டவன் அப்பிடித்தான் அழைப்பானுங்க!

‘அப்பிடியா?”

அவள் ஏன் சிரித்தாள்?

அவனும், சிரித்தான்!-ஏனோ?

சிரிப்பு விதிக்கு மாத்திரம்தான் சொந்தமா என்ன?

“ பைய நட..

சோளக் கொல்லை, மிளகாய்ப்பாத்தி, கேணி, பலாமரக் குழு, நிலக்கடலை தாக்கு- இப்படி அறிமுகப்படுத்தியவனாக அவன் முன்னே நடக்க, அவள் அவன் தடத்தை ஒற்றினாள். வைக்கோல்போர் மறுகியது.

வானத்தாய் கறுப்புப் படுதாவை விரித்து உதறினாள். அந்தப் படுதாவில், தன்னுடைய தர்மமிகு பண்புகளை உடுக்களாக்கி விளையாடி-விளையாட்டுக் காட்டத் தொடங்கினாள்!

அதோ காளியப்பனுக்கு உடைமை கொண்ட

குடிசை வந்துவிட்டது! பொங்கலுக்கு பூசிய காவி வர்ணம் எடுப்பாக விளங்கியது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/209&oldid=1378196" இலிருந்து மீள்விக்கப்பட்டது