பக்கம்:அமுதவல்லி.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 19

பூப்போட்ட தலையணைகளில் சாய்ந்திருந்த நட்சத்திரம் அமுதவல்லி தன்னை மறந்து சிரித்துக் கொண்டேயிருந்தாள். பிறகு, தலைமாட்டில் இருந்த தலையணைகளை ஒவ்வொன்றாக எடுத்துத் தூக்கி வீசினாள். ஸ்டுலைத் தட்டிவிட்டாள்; தொலைபேசி ஒலித்தது; அதைக் கைகொண்டு பொத்தினாள். "ஹலோ!... "ஹலோ மை டியர் பேபி!..." என்று உளறினாள். பிறகு, மதிச்சியத்திலே குடியிருக்கிறது..." என்று பெருங்குரலெடுத்துப் பாடத் தலைப்பட்டாள். நெற்றிமேட்டில் போடப்பட்டிருந்த துணிக்கட்டைப் பிய்க்க முனைந்து தோற்றாள்.

படத் தயாரிப்பாளர் பலவேசம் முதியவர், அவருடைய கண்கள் கலங்கின.

கால்ஸீட்டுக்கு தேதி குறித்துப் போக வந்த, பலவேசம் அவர்கள் தலையில் வேதனையைச் சுமந்தவராக வெளியேறப்போன தருணத்தில், திரை அழகி "நல்லதனமாக எழுந்தாள். அவரை அவள் கூர்த்த மதி பதித்து நோக்கினாள்.

பலவேசம் ஆனந்தக் கூத்துச் செய்தார். "அமுதா உனக்கு ஒண்னு மில்லையே?' என்று ஆசையாகக் கேட்டார்.

"எந்தப் புற்றில் எந்தப் பாம்பு?' என்கிற படத்திலே இப்படி ஒரு கட்டத்தைக் கொடுத்திருக்கிறாங்க. இதுபோலவே ஆயிரம் வாட்டி வந்தாச்சு, என்ன செய்யறது, கேட்கமாட்டேங்கிறாங்க. சம்மதிச்சேன். அங்கே செய்யவேண்டிய ரிஹர்சலை இங்கேயே செய்திட்டேன். அவ்வளவுதான்!" என்றாள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/21&oldid=1203579" இருந்து மீள்விக்கப்பட்டது