பக்கம்:அமுதவல்லி.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

அமுதவல்லி


மொள்ளமா தலையைக் குனிஞ்சிக்கணு உள்ளுக்குள்ள வா, செம்பவளம்’ என்று எச்சரிகை விடுத்தான் காளிப்பன். முழங்காலுக்கு மேலாக கோவணக்கட்டு கட்டியிருந்த சாய வேட்டியை அவிழ்த்து விட்டான். இடதுகைப் புஜத்தில் கட்டப் பட்டிருந்த ‘தாயத்து பளிச்சிட்டது. பொன்னுக்குத் “தக்கனை காந்தி.

குனிந்த தலை நிமிராமல் உள்ளே நுழைந்தாள் செம்பவளம், சரிந்து விழுந்த சேலை மேலாக்கைக் கொய்து போட்டுக்கொண்டாள். நிலைப்படியைத் தாண்டி, பதுங்கிக்கொண்டே உள்ளே நுழைத்து சிதறிய சீதளக் கதிர்களின் மயங்கிய ஒளியின் துணை கொண்டு அவள் சுற்றிச் சூழ பார்வையைச் சுற்றினாள் .

எட்டடிக்குச்சு அது. மண்ணாலான கட்டைச் சுவர். முகட்டில் பனை ஓலைக்கட்டு. சாணம் போட்டு மெழுகி, உரை கல்லால் தேய்த்துப் பழகியிருந்த மண் தரை. முகம் பார்த்தால் முகம் தெரியும். ஆனால், அவன் அதற்கென்று தனியே முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்று வைத்திருந்தான். அதோ, ஈசான்ய விட்டத்தில் பனஞ்சப்பையின் தாங்கலில் தொங்கிக் கொண்டிருக்கிறது ஆடி நூவரலியாவில் கிரயம் செய்தது அது. சல்லி: கூடுதல்:

‘செம்பவளம்...” எ ன் று குரல் ஈர்த்தான் அவன். தெற்குப் பார்த்த குச்சில் அவனும் தெற்குப் பக்கம் பார்த்தவனாகக் கூப்பிட்டான்.

“சும்மா உள்ளுக்கு வாங்க. தலைபத்திரம்: என்றாள் அவள். குரலில் எவ்வளவு பாசம் பெருக் கெடுத்தது:”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/210&oldid=1378212" இலிருந்து மீள்விக்கப்பட்டது