பக்கம்:அமுதவல்லி.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறு முகம் 209

அவன் தயங்கியபடி தென்பக்கம் திரும்பி உள்ளே வாகுபார்த்து நுழைந்தான். கட்டுவிட்டிருந்த ஒலைகளின் இடுக்குகளை ஏய்த்துவிட்டு, உள்ளே சிந்திய வெள்ளைப் புள்ளிகளின் ஜா டையில் அவனுக்குக் கை விளக்கு தென்படத் தவற வில்லை. கைப்பதனமாகப் பற்றினான். சீமை எண்ணெய்ப் போத்தலும் தீக்குச்சியும் விளக்குப் பொருதின.

‘குந்து...!” ‘குந்துங்க!”

ஒரே தொனியில், ஒரே பாவத்துடன், ஒரே பாவனை கொண்டு புறப்பட்டு ஒலித்தன இரட்டைக் குரல்கள்.

ஓலைப்பாயில் சரணடைந்தாள் செம்பவளம். எதிர்த் தரப்பில் காணப்பட்ட கவனம் அவள் பார் வையை ஈர்த்தது. கொஞ்சமுந்தி நானு படுத்து எந்திருச்ச எடம் அதான் போல! கூதல் காற்று தறி கெட்டு வீசிற்று. பொட்டல் வெளியில் காற்றுக்கா பஞ்சம்?

“ஆமா, நானு எப்படி இங்கிட்டு வந்தேன்?”

‘நீ செத்துப்புட எத்தனம் செஞ்சப்ப, நானு வந்து ஒன்னைக் காப்பாத்தி என்னோட பொட்டி வண்டியிலே ஒன்னைக் கிடத்தி ஒரே விரட்டிலே இங் கிட்டுக் கொண்டாந்து சேர்த்துப் புட்டேன். ஒனக்குச் சுயபிரக்ஞை வரலே. அந்தாலே தெரியுதே கொட்டகை, அதிலே கட்டிலுமேலே ஒண்ணைக் கிடத் தினேன். குவளையிலே தண்ணி மொண்டாந்து உம்மூஞ்சிலே தெளிச்சேன், மூச்சுக்காட்டலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/211&oldid=1378235" இலிருந்து மீள்விக்கப்பட்டது