பக்கம்:அமுதவல்லி.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 21

தனக்குத் தானே புலம்பி அப்புலம் பலின் அழுத்தத்தில் தன்னைத் தானே அழுத்திக்கொண்டு திக்கு முக்காடினாள். திமிலோ கப்பட்ட இதயம் தரை மீனாகத் தத் தளித்தது.

“அழுவப்புடாது செம்பவளம். நானு அந்தத் தருணத்துக்கு வந்திருந்தாக்க, அந்தப் போக்கிரிப்பய மவனைக் குதறி எடுத்து அவன் குருதியைக் குடிச் சிருக்க மாட்டேனா, சாமியாடிச் சாம்பானுக்கு மிஞ்சி? எம் பொசிப்பு அம்மட்டுத்தான்! ஊரு பேரு மூஞ்சி முகரை தெரியாத அந்தப் பாவிமவன் தப்பிச் சுக்கிட்டான்!. ஆமா, அந்த ஆளை தடயம் கண்டுக்கிடக்கூட ஏலலையா?... எங்கானும் கண்டாக்கூட இனம் காண ஏலாதா?-’ என்று பதட்டம் மூள விசாரித்தான் காளியப்பன்.

“ நானு நடப்பைப் புட்டுவச்சுச் சொன்னாத்தான் ஒங்களுக்கு அல்லாம் மட்டுப்படும். எனக்குப் பொறந்த மண்ணுநா குடி, அரசர் குளத்திலே எங்க அம்மான் ஆடு இருக்குது; அங்கிட்டாலே விருந்தாடி பறிஞ்சேன். அம்மான் மவன் காரங்கதான் இந்தத்தை கடோசியிலே எனக்கு வாய்ச்சிட்ட மச்சானாக ஆக இருந்திச்சு. அதுக்கு எந்தலையிலே தம் எழுதிப் போடலை நானு விருந்துக்கு உட்கார்ந்துப்பிட்டு, மதியத்துக்கு- அதான் இன்னியப் பொளுது மதியத்துக்குத் தாண்டி அடி சாயத்தலைப் பட்ட பொளுதுக்கு, நானு காட்டுப் பக்கம் நாடி வந்தேனுங்க. அம்மன் வூட்டு காடு கண்ணுங் களுக்குப் புதுப்புல்லு கொஞ்சம் செதுக்கிப் போடுவோமேயின்னு உளவாரமும் தட்டுக் கூடையுமாய்ப் பறிஞ்சு நடந்து, புல் கண்ட இடத்துக்கு வந்தேன். வெயிலோட சுள்ளாப்பு தணிஞ்சு வந்திச்சு, பாதச்சூடு பதவிசானது ஆனதாலே, சாவகாசமாக் குந்திக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/213&oldid=1378264" இலிருந்து மீள்விக்கப்பட்டது