பக்கம்:அமுதவல்லி.pdf/215

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் ais

சரி, சரி. நானு ஒரு புத்தி கெட்டவன். சையே நோண் டிக்கிட்டு இருக்கிறேன்...சரி அந்தச் சனியனைப் பத்தி இனிமெ நெஞ்சுக்குக் கொண்டா ரவே புடாது. அதான் லாயக்கு : இப்ப நீ எங்க ஆட்டுக்கு விருந்தாடிப் பொண்ணு நேரத் தோடவே இங்காலே வந்திருந்தா, ஒரு கோழியைத் தட்டிக் குழம்பு ஆக்கிப் போட்டிருப்பேன். அல்லாம் விடியட்டும். விருந்து ஒடியா போகுது? இப்ப நீ ஏதாச்சும் சாப்பிட வேணும். பாக்குக் கடிச்சுத் துப்புற நாழிகை நீ இந்த .வெத்திலைக்குட் டானிலே இருக்கிற பாக்கைக் கடிச்சுக்கிட்டு, வெத்தி லையையும் மென்னுக்கிட்டு இரு. மறந்திடாம, மூனாவதையும் சேர்த்துக்கிடு நானு சோறு களைஞ்சு போட்டு வடிச்சுப்பிடுறேன். காலம் பற ஆக்கின குழம்பு இருக்கு. சுண்டல் சாதம் வேறே ஊர்ப்பட்டது மிஞ்சியிருக்குது! போதுமில்ல. இல்லேன்னா, அந்தாலே நிக்குது கோழி, அதைப்பிடிச்சாந்து தலையைத் தட்டட்டுமா?” என்று ஒரே மூச் சில் பல விவரங்களை அவள் முன் வைத்தான் காளியப்பன். அகன்று விரிந்திருந்த மார்பகத்தில் துளிர்த்திருந்த வேர்வையை லேஞ்சுகொண்டு துடைத்தான். பிறகு, அவளை உன்னிப்பாக நோட்டம் பதித் தான். - -

அவளோ அவனை அதிசயமாகப் பார்த்தாள், மீன் விழிகளிலே மீன் களைக் காணோம்; விந்தைக் குறியீடுகள் தாம் காணக் கிடத்தன: காணக் கிடைத்தன! ஆமா, ஒங்க பொஞ்சாதி?’ என்று மெல்ல இழுபறியாக ஒதுக்கினாள்.

நல்லாக் கேட்டே பொஞ்சாதி தானே? எருச்சி வேளான்கிட்ட அச்சாரம் கட்டி செய்யச் சொல்லி ஏகப்பட்ட கிழமை நழுவிப்பிடுச்சு. பொஞ்சாதியைச் செஞ்சு கொண்டாரலே!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/215&oldid=1378279" இருந்து மீள்விக்கப்பட்டது