பக்கம்:அமுதவல்லி.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

.2 16 அமுத வல்வி

கொதிக்க வச்சுப்புடுறேன். சா மான் சட்டுகளை அள்ளுங்க!’ என்று துருசு படுத்தினாள்.

நல்ல மூச்சு வெளிவந்தது காளியப்பனிடமிருந்து, கொடுவாளை இருந்த இடத்திலே சேர்ப்பித்தான்.

வெரசுபடுத்துங்க. பாவம், ஒங்களுக்குப் பசிக்கும்!” என்றாள் செங்கமலம்.

அவனுடன் சுவரொட்டி விளக்கும் ஓடியாடியது, பிறகு அவளுடன் அணைந்தது, அணையாத விளக்கு.

அவள் அடுப்படிக்குள் அடியெடுத்து வைத்தாள், அரிசியுடன்.

அவள் அடுப்படியை விட்டு அடி மீட்டெடுத்தாள், சோற்றுடன்,

‘இந்தாப் பாருங்க, ஒங்களைத் தானுங்களேஎன்று அலட்டினாள் செம்பவளம். கழுத்தின் அடி வட்டத்தில் அப்பியிருந்த வேர்வையைச் சேலை முகத் தலைப்பினால் துடைத்தாள். எரிச்சல் விளைந்தது. குனிந்துப் பார்த்தபோது, நகக் கீறல்கள் இரண்டு ‘குறுக்குச் சாலோடி இருந்தன. அட பாவி . பாதகா கச்சையின் கீழ் முடிச்சுக்களை “லாகவம் பார்த்தபடி நேரே நடை பயின்றாள். வண்ணக் கலாபமாக ஆனாளோ என்னவோ? -

பிறை வடித்த பால் வண்ண நிலவில் காளியப்பன் எதிர்ப் புறம் பார்வையைச் சாடியபோது, செம்பவளம் அவன் கண்களிடை மிதந்தாள். மாடுகளுக்குத் தீவனம் வைத்த பின்னர், திரும்பினான். அவன் கையில் பூவரசுத்தடுக்கு இலை ஒன்று தையல் கண்டு இருந்தது. தையலுக்கல்லவா? அவன் கொட்டாவியை வெளியேற்றிக்கொண்டு வந்தான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/218&oldid=1378311" இலிருந்து மீள்விக்கப்பட்டது