பக்கம்:அமுதவல்லி.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆதுமுகம்

தூக்கம் கண்ணைச் சுத்துதுங்களா?”

‘பசி தான் கண்ணைச் சுத்துது, வெள்ளன கஞ்சி குடிச்சது!...”

சுருக்கண் மூஞ்சியைக் கழுவிக்கிணு ஒடியாங்க!”

அவனுடைய குறிஞ்சிப்பாடி வட்டி"யில் சோறு ஆவி பறந்தது. வெஞ்சனத் தட்டில் தட்டின்றி பதார்த்தங்கள் காட்சியளித்தன. பழைமை மாறாக் கோலம்!

முகத்தைத் துடைத்துக் கொண்டு வந்தான் காளியப்பன்.

‘துண்ணுருவேனுமா ?” என்று கேட்டுக் கொண்டு விபூதி மடலை அவனிடம் நீட்டினாள். மருதாணி நகங்கள் மின்னின.

அவன் பூசிக்கொண்டான். குந்தினான். வட்டிலை நகர்த்திக் கொண்டான். அந்த இலையிலே நீ உண்ணுக்க?’ என்று ஆலோசனை பகன்றான்.

“ஊம் கொட்டினாள் அவள்.

‘உண்ணுங்க!

“முதலிலே நீங்க உண்ணுங்க. அதான். வளமை”

‘நீ எம்புட்டு விருந்தாடிப் பொண்ணாச்சுதே?

ஆமா, விருந்துக்கு வந்து வாய்ச்சவள்தான். அட்டி சொல்லலோ நானு பொட்டைக் களுதை பொறகாலே சாப்பிட்டுக்குறேன்!” -

சும்மா நீயும் சாப்பிடு!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/219&oldid=1378323" இலிருந்து மீள்விக்கப்பட்டது