பக்கம்:அமுதவல்லி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 அமுத வல்லி

சோமலிங்கம் அந்தப்பங்களாவின் முகப்பில் வந்து நின்றான். அவனுக்கு எல்லாமே 'பூடகமாகத் தோன்றியது. "அமுதவல்லி அம்மாவைக் காணலையா? இதை நினைச்சுப் பார்க்கிறதுக்கே பயமாயிருக்கே?' என்று ஆயிரம் தரம் தனக்குள் குழப்பிக் கொண்டான். ஒரு சிட்டிகை பொடித்துகளை அள்ளி மூக்கில் திணித்துக்கொண்டு, சிந்தனை ரதத்தை முடுக்கிவிட்டான். அமுதவல்லியின் மறைவு அவனுக்கு மர்மமாகவே தோன்றியது. கண்ணாடியைக் கழற்றி, கண்ணிரைத் துடைத்துக் கொண்டான். நிலவை ரசிக்கத் தோன்றவில்லை. ஆனால், நேரத்தை அளந்தான். வரவேற்பு அறையில் நேர்வசமாகப் பொருத்தப்பட்டிருந்த கெடியாரத்தைப் பார்த்தான். கார்ச்சத்தம் ஏதாவது கேட்கிறதா வென்று காதுகளைத் தீட்டிக்கொண்டு நின்றான். டெலிபோன் மணியின் சத்தம்தான் கேட்டது. பின்னிய வேஷ்டியை மடக்கிக் கட்டிக் கொண்டு, விரைவுடன் ஓடினான்.

தொலைபேசி வழியே வழிந்த சந்தேகம் அவனுடைய சுய உணர்வை மறக்கடித்திருக்க வேண்டும்.பொறி தட்டும் பொழுதளவு, பொறி தட்டினாற் போல நின்ற பிறகு தான், அவனால் வாயைத் திறக்க முடிந்தது. "ஆமாங்க, டைரக்டர் ஸார் நேத்து இல்லீங்க, இன்னிக்கு. அதானுங்க ஒரு மணிக்கு முந்திதானுங்க எல்லாம் சரமாரியாக நடந்திருக்குது. ஆமாங்க. நான் அம்மாவோட போகலிங்க. வீட்டிலே உடம்புக்கு சரிப்படலை. அதாலே தான் போகலைங்க, சரி...வாங்க, வாங்க... வச்சுப் பிடவா?. ஒ!..." என்று வார்த்தைகளை உடைத்து உடைத்துப் பேசி முடித்தான் அவன். வழிந்த வேர். வையை வழித்து விடாமலே, அவன் மறுபடி அங்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/22&oldid=1214838" இலிருந்து மீள்விக்கப்பட்டது