பக்கம்:அமுதவல்லி.pdf/221

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆவை எஸ். ஆறுமுகம் - 2 19

‘சாப்பிடுற பழக்கம் இல்லே! என்று கைகளைக் கழுவினான்.

அவள் தன்னிடம் முன்பு ஒப்படைக்கப்பட்ட வெற்றிலைக் குட்டானை இப்போது அவனிடம் ஒப்படைத்தாள்.

“நீப்போட்டுக்கலையா?” “இந்த மூஞ்சிக்கு இதுதான் பத் தலையா?” அவன் மெளனத்தை விழுங்கினான். “சரிலே... நீ சாப்பிடு!” அவள் நீர் முட்டியைக் கவிழ்த்துக் கையைக் கழு வினாள். இலையின் முன்னே குந்தினாள். பாங்குற அட்டனைக் கால் இட்டுக்கொண்டாள். கால் தண்டைகளை மறைத்தாள். எம்பித் தணிந்தது மார்பகம். மார கச் சேலையைச் சீர்ப்படுத்திக் கொண்டவள். திடுதிப்பென்று கதறியழுதவளாக எழுந்தாள். சருவச் சட்டியில் கால் இடறியது. ‘எனக்குச் சோறு வேணாம்! என்னை எம்போக்குக்கு விட்டுப் புட மாட்டீங்களா, ஐயா?: என்று கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சினாள் செம்பவளம்.

சாப்பிடு. அப்பாலே போவலாமே!” வாய்க்காதுங்க!” நானு சாப்பிட்டது தப்பு!”

அப்படிச் சொல்லப்படாதுங்க. அடுக்காது.

பின் என்னவாம்? நீ நல்லதன மாச் சாப்பிடுவே, அழும்பு பேசமாட்டேன்னு நம்பித்தானே நானு முந்திச் சாப்பிட்டேன்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/221&oldid=1378336" இருந்து மீள்விக்கப்பட்டது