பக்கம்:அமுதவல்லி.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220 அமுதவல்லி

மெய் தான்!” பின்னே சாப்பிடு:

ஊக்கூம்! நானு பறியப் போறேன்!” ஒங்க ஆட்டை நாடியா? இல்லே உம் மச்சான் ஆட்டுக்கா?

“எங்கணவும் போகல்லே!”

பொறகு.?? “என்னோட விதியைத் தே டி க் கி ட் டு ப் போறேன்!”

காளியப்பன் தவித்தான்; துடித்தான். மறுபடியும் சாகப் போறியா?”

அவள் மெளனம் சாதித்தாள். நீ செத்தா நானும் அந்தடியும் செத்துப்புடுவேன்!”

அவள் பதறித் தவித்துத் துடிப்பைக் கக்கினாள். “எனக்கும் ஓங்களுக்கும் என்னா புனை?’ என்று நைந்த குரலெடுத்து நயனத்திடை நீத்தொடுத்து, நெடுமூச்சை வெளியெடுத்துக் கேட்டாள்.

“நானு நெஞ்சுள்ள மனுசன்! நீ நெஞ்சு கொண்ட அபலைப் பொண்ணு! அதான் பிணை காரணம்... சகலமும் புரிஞ்சுதா?

கூண்டைத் துண்டித்து வெளியேற எத்தனம் செய்தது கோலப் பசுங்கிளி.

அவளது பூங்கரம் பற்றித் தடுத்தான் காளியப்பன். இந்தாப் பாரு...நீ உன்னோட நேச மச்சான் ஆட்டுக்குவா. கையோட கொண்டாந்து அங்கனே விட்டுப்புட்டு வரேன்!... உன் ஆத்தா கிட்ட வா...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/222&oldid=1378338" இலிருந்து மீள்விக்கப்பட்டது