பக்கம்:அமுதவல்லி.pdf/224

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமுத வல்வி

‘சாமி ஆணையா?”

‘சாமி ஆனையாத்தான் !’

‘கையடிச்சுக் கொடுக்க ஏலுமா?

ஒ!’ என்றாள் நெஞ்சம் நெகிழ. கண்ணாடி வளைகள் குலுங்க கையடித்துக் கொடுத்தாள். நீங்க சொல்லுங்க, ஒங்க சொல்லு தான் இனிமே எனக்கு வேத வாக்கு!’

நொடி நேரம் காளியப்பன் சிறு பிள்ளை போல தேம்பிக் கொண்டே நின்றான். உணர்ச்சியின் ருசி பேதங்கள் அவனுடைய நாக்கின் நரம்புகளிலே அடிநாதமிட்டன; ரத்த நாளங்களைப் பேசச் செய்தன வீராப்பின் நெஞ்சுரத்துடன் அவன் வாய் திறந்தான். “நீ என்னை கண்ணாலம் கட்டிக்கிட ஒப்புவியா? என்று கேட்டான். -

செம்பவளம் அழகின் கலையுணர்ச்சி மிளிர விம் மினாள். சிந்துரக் கன்னங்களிலே ஒய்யாரம் பதித் தது நீர் முத்தங்கள். நெச மாலுமாம்... சரிங்க! ரோசிச்சேன். நீங்க செப்பிட்டீங்க!... எனக்கு விடி மோட்சம் காட்டியிருக்க நீங்க! ஒங்களோட அன்புக்குக் கட்டுப்பட்டுத் தான் என்னோட வாழ்க்கையை ஒங்களுக்குத் தர்மம் செய்யச் சமமதிக் கிறேன்!... ஆமாமுங்க, எங்க சாமிக்கு மெய்யான விசயமுங்க இது!’

காளியப்பன் தன்னுடைய எழிலார்ந்த கறுமை படர்ந்த கறுக் கரிவாள் மீசையை ஒயிலுடன் நீவிவிட்டுக் கொண்டான், சபாசு! நானு ரொம்ப ரொம்ப கொடுத்து வச்சவனாக்கும்! அதான் ஒன் னையே எடுத்துக் கிட்டேனாக்கும்!... எனக்குப் பொசிப்பு அனையமாயிருக்கு அதான், இந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/224&oldid=1378351" இருந்து மீள்விக்கப்பட்டது