பக்கம்:அமுதவல்லி.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

அமுதவல்லி


 சுந்தரக் கனவுகள் நெஞ்சிலும் நினைவிலும் பின்னி விளையாட, காளியப்பன் அந்தம் சேர்ந்துத் தன்னுடன் சிரித்துக் கொண்டான். மேனியின் சிலிர்ப்புத் தட்டுப்பட்டது. விண்ணுக்கும் மண்ணுக்குமாகக் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தான். தன்னுள் செம்பவளத்தை நிறைத்துக் கூடு விட்டுக் கூடு பாய்ந்தான். இன்பம் பாய்ந்தது. இனிப்புக் கண்ணீர் பாய்ந்தது. இனிய நற்கனவுகளின் இனிய நல்நினைவுகள் பாய்ந்தன .

“சொக்க வெள்ளிப் பாற்குடம் செம்மை நலம் கொழித்து பிறைவடிவில் மிதந்து கொண்டிருந்தது.

அழகனுக்கு அழகை ரசிக்கத் தெரியும். அழகுக்கு அழகில் மயங்கத் தெரியும். போதைக்குப் போதம் புதிது.

போதத்துக்குப் போதை அந்தியம்.

அவன் அவளுள் அடங்கி மீண்ட நினைவில், போதையும் போதமும் லய சுத்தமாகப் பின்னி விலகின. அவள் ஞாபகத்தில் அவன் கலந்த சித்தத் தெளிவோடு, எட்டி நடந்தான். பாவட்டா பீடிகளைச் சுவைத்து இழுத்தவனாக அவன் நடந்த வேளையில், சாலை நெட்டுக்குமாக வெறுமைச் சாட்சியாய் நின்ற பாழ் வெளிக்கு ஒரு திருஷ்டி பரிகாரம் போல அமைந்திருந்த அந்த இரண்டு ஆலமரங்களையே இமை வலிக்கப் பார்த்துக் கொண்டேயிருந்தான். அப்போது அவன் கைவிரலில் கொடுக்கியிருந்த துண்டு பீடிகை நழுவ, அவள் இதழ்க் கரையை விட்டு பாட்டு ஒன்று கிளம்பியது. அவன் பாடினான். பாட்டிடைக் கலந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/226&oldid=1378402" இலிருந்து மீள்விக்கப்பட்டது