பக்கம்:அமுதவல்லி.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ் ஆறுமுகம்

225


‘சாலையிலே ரெண்டு மரம் !

சர்க்காரு வச்ச மரம் ! ஓங்கி வளர்ந்த மரம் ! ஒனக்கேத்த தங்க மரம் !’

அவன் இதழ்களை நிறுத்தி ஓய்ந்த நேரத்திலே, அருகாகச் சென்ற ரேக்ளா ஒன்று விசுக்கென்று நின்றது. ஓரிளைஞன் குதித்தான். வாட்டசாட்ட மான புள்ளி.

‘அண்ணாச்சிக்கில்ல... ஏறுங்க!- நா குடிப்பொண்ணு ஒண்னு இந்தப் பக்கம் வந்திச்சுங்களா? கஞ்சிப் பொளுது தாண்டி பறிஞ்சு வந்ததை இம்மாம் பொழுது மண்டியும் வீட்டுப் புறத்தாலே காண முடியலிங்க... செம்பவளம்னு பேருங்க கண்ட துண்டா அண்ணாச்சி!” என்று குரல் கலங்கக் கேட்டான் அந்த அழகன். -

அவனையே வெறிக்கப் பார்த்து நின்ற காளியப்பன், சுயப்பிரக்ஞை பெற்றதும், “அப்படி ஒரு பெண்ணும் இந்தச் சாலைப் பக்கமே வரலையே! நானு இங்கிட்டுத் தானே மம்மலிலேந்து இது நேரத் தொட்டியும் சுத்திக்கினு இருக்கேன்!... ஒங்களைப் பார்க்கிறதுக்குப் பரிதாபமா இருக்குது! உங்க நாட்டுப் பகுதியிலே தேடிப் பாருங்க!” என்று முத்தாய்ப்பு வைத்தான். அவனது அடிமரம் நெகிழ்ந்தது.

காளியப்பன் புதிய உள்ளத்துடன் கேணியில் இரண்டு சால் நீர் இறைத்துத் தலையில் ஊற்றிக் கொண்டு புதிய உடம்புடன் தன் இருப்பிடத்தை அடைந்து, புள்ளே செம்பவளம்’ என்று கூவி, குளிச்சாச்சா? புதுசு உடுத்தியாச்சா? ஒம் மச்சான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/227&oldid=1378413" இலிருந்து மீள்விக்கப்பட்டது