பக்கம்:அமுதவல்லி.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

அமுதவல்லி



காரன் நானு தலையை உள்ளாற காட்டலாமா? வரம் கேட்டு நிக்கிறேன்!” என்று அடுக்கினான்.

அதற்குள் அவள் முன்னே, வாசல் வெளி நிலவில், புதிய நிலவாக வந்து நின்றாள் செம்பவளம். செம்பவளத்தின் தேஜஸ் அவள் உருவில் உருக்காட்டியது. அக்கரைச் சீமைப் புடவையையும் ரவிக்கையும் அவளுக்கு அழகுக்கு அழகாக அமையலாயின. பூவும் பொட்டும் மனத்தன!

காளியப்பன் உட்புறம் வ ந் து குந்தினான். அவனது பாதத் தடியில் இருந்த சுள்ளிக் கட்டை விலக்கினான். அடைப்புக் கதவு ஒன்று இருந்தது. அதன் பூட்டைத் திறந்தான். குனிந்து கையை நுழைத்தான் ஒரு சிறிய பெட்டி மீண்டது. அதிலிருந்து நகை- நட்டுக்கள் சிலவும் மீண்டன!

“இந்தாலே, அல்லாத்தையும் போட்டுக்க!”

அவள் எல்லாவற்றையும் பார்த்தாள். ஆமா, ஏதுங்க இந்தத்தாலி?’ என்று தடுமாற்றத்துடன் விநயமாகக் கேட்டாள்.

“எம் பொஞ்சாதியாய் வரத்தக்கவளுக்குன்னு அக்கரைச் சீமையிலேயே அந்த மாச்செஞ்சு கொண்டாந்தது இதுக!’

அவள் அணிகலன்களை அணிந்து கொண்ட பின், தங்கத் தாலியை அவனிடம் சமர்ப்பித்தாள்; ‘ இந்தாங்க!’ என்றாள்.

அவன் அந்தத் திருமாங்கல்யத்தை வாங்கிக் கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/228&oldid=1378434" இலிருந்து மீள்விக்கப்பட்டது