பக்கம்:அமுதவல்லி.pdf/232

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

அமுதவல்லிநெடுஞ்சாண் கிடையாக அந்த மண்ணில் அடித்து விழுந்து கூக்குரல் பரப்பினான்: பாங்குறத் தொங்கிய அந்தக் கஞ்சமலர்ப் பாதங்களைப் பற்றித் தன்னுடைய கண்களிலே ஒற்றிக்கொண்டு கதறிக் கதறிப் புலம்பினான் அவன்-காளியப்பன். எங்கண்ணே, செம்பவளம்! இனி எப்பொறப்புக்குமே நீ இந்தப் பாவியைச் சமிக்கவே மாட்டியோ?... ஐயையோ!. எந் தெய்வமே! .

உடைந்து கிடந்த கண்ணாடி வளைகள் சிரித்தன!

புலர்கிறது:

சாலையின் இரண்டாவது மரத்தின் கிளை உச்சத்திலே ஊருக்கென மற்றொரு காட்சி தவம் இருந்தது.

‘பாவிப் பயலே!... பாளத்த காளியப் பா!...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/232&oldid=1378459" இருந்து மீள்விக்கப்பட்டது