பக்கம்:அமுதவல்லி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமூகம் - 25

"சோமலிங்கம், பொழுது விடிந்ததும், முதல் வேலையாக இதைச் செய்ய வேண்டும். நம்மிடம் வேலைக்கு இருந்தானே வேலப்பன், அவன் அதோ நிற்கிறான். அவனிடம் நூறு ரூபாய் எண்ணிக் கொடுக்க வேண்டும். அவன் இல்லாவிட்டால் என் மானம் மட்டுமல்ல, உயிரே போயிருக்கும்!" என்று மூச்சுத் தடுமாறக் கூறினாள் அழகி அமுதவல்லி, முகம் விகாரமாகக் காணப்பட்டது.

ஒப்பனைக்காரனைப் பற்றிய ஞாபகத்துடன் சோமலிங்கம் மனம் மறுகினான்; திசை மறுகினான். வேலப்பா!’ என்று அவன் கூப்பாடு போட்ட மறுகணம், ‘ஆ!..’ என்று உரக்கக் கத்த வேண்டியவன் ஆனான். அதே தருணத்தில் அமுதவல்லியும் ஆ!’ என்று ஒலத்தின் ஒலி கூட்டினாள்!

அன்னை வாக்கு அமிர்தம் !

அழகுப் பதுமை அமுதவல்லி ஆ!” என்று ஒலி கூட்டிய அந்தக் குரல், அவளுடைய உந்திக் கமலத்தைத் தொட்டுப் புறப்பட்டது. நெஞ்சத்தின் விந்தைக் குறிப்பு நேத்திரங்களில் நிழலாடியது. அவள் தன் நினைவைச் சமன் செய்து கொண்டு, பார்வைப் போக்கையும் செம்மைப்படுத்தியவளாக எதிர்ப்புறம் பார்த்தாள். ஒருமுறை, தனக்கும் தன் அன்னைக்கும் நடந்த பேச்சு வார்த்தைகள் கரும் பலகையில் எழுதப்பட்ட வெள்ளை எழுத்துக்களாகத் தெரிந்தன. "நம்ம ஊரிலே இருக்கிற உன்னோட அம்மான்மவன் மாரியப்பனுக்குக் கடுதாசி போட்டு

அ-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/27&oldid=1214848" இலிருந்து மீள்விக்கப்பட்டது