பக்கம்:அமுதவல்லி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 27

விக்கிரகம் ஆனாள் காத்தாயி. விக்கிரகம் என்ற நிலைக்கு மனித உடல் உருமாறும் வேளையில், கை தொழ நிற்பது இயல்புதானே? அவ்வாறுதான், அழகு எனும் தத்துவம் ஆராதனைப் பொருளானது.

அழகு மலர்ந்தால். ரசனை பெருகும், ரசனை பெருகும் போது, போட்டி விளையும், போட்டி விளைகையில், பூசல் உதயமாகும். இது இயற்கை. இந்த இயற்கையேதான் உ ல க மா ம்!-சொல்கிறார்கள்; நம்புகிறோம் தவறில்லையே?

காத்தாயியின் கண் வீச்சு அந்தப் பட்டிக்காட்டுக் காளைகளின் கண் மயக்கத்துக்குத் துாபம் போட்டது. பெண்ணின் விழி மடல் விழிந்தால் போதும், ஆண்களின் கண்கள் சொக்கிச் சுழன்று மூடிவிடும். அம்மயக்கத்தின் விலைக்கு மதிப்புப் போடப்பட வேண்டுமென்று இளவட்டக்குழு சிதம்பர ரகசியம் பேசிற்று. ஆனால், காத்தாயி எதையும் பொருட்படுத்தவில்லை: யாரையும் பொருட்படுத்தவில்லை.

கோட்டை கொத்தளம் எதுவும் அந்தச் சிற்றுாருக்கு அரண் அ மை க் காம ற் போனாலும், பெயரில் கோட்டையிருந்தது. அ த னா ல் தா ன், மனித மனங்கள் அனைத்தும் கோட்டை கட்டினவோ? ஆண்டியப்பன் அவ்வூர் பெரிய தனக்காரர் மகன். பெற்றதாய் தன் ஆசை மைந்தனுக்கு காத்தாயிப் பெண்ணைக் கட்டி முடித்துவிட வேண்டுமென்று கோட்டை அமைத்தாள். ஆண்டிப்பன் பெயரளவில் அப்படி என்றாலும், பெரும்புள்ளி அல்லவா? ஆள் எடுப்புத்தான். அழகு எடுபடவில்லையே? ஆம் புள்ளைச் சிங்கத்துக்கு அளகாவது சொளகாவது? மே லுவலுவாயிருந்தாக்க பத்தாதாங்காட்டி? என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/29&oldid=1228803" இலிருந்து மீள்விக்கப்பட்டது