பக்கம்:அமுதவல்லி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் - 29

போனாக்க, எம்மூச்சான மூச்சு நின்னுப்பூடுமே?...’ என்று உள்ளத்தை உதட்டில் கொணர்ந்து நின்றான் அவன்.

"மச்சான், இப்ப நீங்க சும்மா இருங்க. எம்புட்டுக் கை இப்ப மெலிஞ்சு கிடக்குதுங்க. இந்தத் தேரோட்டம் பேயிறட்டும்; அடுத்த காப்புக்கட்டுக் குள்ளாற, நீங்க எனக்கு மஞ்சக் கவுத்தைக் கட்டிப் புடலாமுங்க!" என்று உறுதியை முத்தாரமாக்கி, உண்மையை உத்தார மாக்கினாளே, பாவை? அவள் ...பா வையா, பேதையா?

பேதை அவள்!’ என்று இந்திரஜித் எண்ணப்பூ தொடுத்திருக்க வேண்டும். இல்லையென்றால், குருதிக்கோடுகள் குடை ஏந்திய அவனது முகத்தில் அவ்வளவு அகம் பாவம் விதை துாவியிருக்குமா, என்ன? மனம் அகந்தையின் ஆடுகளமாக மாறும் போது, விதி அந்த ஆடுகளத்தையே கண்மண் தெரியா ஆட்டிப்படைத்துவிடும் வல்லமை பெற்ற தென்பதை அவன் எப்படி அறிவான்? அவன் நடிகன். உள்ளத்தில் உள்ளத்தைக் கூடுவிட்டுக் கூடு பாயச் செய்து காட்டும் ரசவாத வித்தை பயின்றவன்! அவ்வளவு தான்!

அவன் திடுக்கிட்டுத் தலையைத் திருப்பினான். தன்னையே ஒரு ஜோடி விழிகள் விழுங்கத் தருணம், கணித்துக் கொண்டிருந்த தாத்பரியத்தைக் கணித்தான் அவன். சிந்தனை வசப்பட்ட நிலையுடன், முடியைக் கோதிக் கொண்டான். கை விரல்களில் ரத்தத் துளிகள் பாத துரளி அமைத்திருந்தன.

"உங்களை என் உயிராக நினைத்திருந்தேனே, இந்திரஜித்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/31&oldid=1229323" இலிருந்து மீள்விக்கப்பட்டது