பக்கம்:அமுதவல்லி.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 அமுதவல்லி

குரல், அவனுடைய குரல்வளையைப் பற்றி யதோ?

தன்பேரில் தவறில்லை என்பதை உணரும் குழந்தை, தன்னை தவற்றுக்கு இலக்காகத் துணிந்த உள்ளத்தையே அண்டி ஆதரவு காட்டிப் பேசும் போக்கில் அவள் கேட்டாள். அவளுடைய இந்தக் கேள்வியில், அவளது காதலின் கதைக்குரிய உள்ளடக்கம் இடம் பிடித்து வைத்திருந்தது. காணாதவர்கள் கண்ட கதை வரலாறு. கண்டவர்கள் காதலித்த கதை நடப்புச் சித்திரம். அப்படியிருக்கையில் , வேண்டுமென்றே அளவிட்டு, ஏதோ மன்றமுகச் சூது விளைந்து விட்டிருக்கிறதே? இதைப் பற்றிய நினைப்பில் உழன்றாள் அவள். நெஞ்சு வெடித்ததோ, என்னவோ? சிரிப்பு வெடிக்கத் தலைப்பட்டது! ..

அமுதவல்லி பயங்கரமாகச் சிரிப்பை உமிழ்ந்தாள்.

அப்போது:

‘காத்தாயி!” என்ற கூப்பாடு மேய்ந்து வந்தது.

அமுதவல்லி விம்மி வெடித்த கண்களைத் திசை மாற்றினாள்.

அங்கே மாரியப்பன் நின்று கொண்டிருந்தான். பந்த-பாசம் துறக்கப் பழகிவரும் துறவியையொப்ப அவனுடைய முகத்தோற்றம் விளங்கியது.

‘அம்மான் மகனே! நீங்கள் இல்லாமற் போயிருந் தால் நான் திசை மாறித் திக்கிழந்து போயிருப் பேனே? இந்த மூன்று வருஷங்களாக, எத்தனையோ தொல்லைகளுக்கு மத்தியில் நான் கட்டிக் காப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/32&oldid=1229325" இருந்து மீள்விக்கப்பட்டது