உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமுதவல்லி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

அமுதவல்லி


அமுதவல்லி ஆனந்தமாகச் சிரித்தாள். அச்சிரிப்பில், நடந்த ரகசிய நடப்புக்கள் நடந்தன.

இந்திரஜித்தும் அமுதவல்லியுடன் திருப்பதிக்குச் செல்வதாக ஏற்படாகியிருந்தது. திட்டமிட்ட பிரகாரம் அவளது கார் இந்திரஜித்தையும் ஏற்றிக் கொண்டது, சுவாமி தரிசனம் முடிந்தது. திரும்பினார்கள். இருட்டியது. வழியில் ஒரு காடு. அந்த முக்கத்தில் விரைவாகக் காரை திருப்பிய போது: நாலைந்து முரடர்கள் காரைத் நிறுத்தி அமுதவல்லியைத் தாக்க முனைந்தார்கள். அப்போது, இந்திரஜித் காரிலிருந்து இறங்கி அவளைத் தழுவ முனைந்தான். தெய்வாதீனமாக, அது தருணம்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அங்கே தாடி மீசை திகழ வேலப்பன் தோன்றினான். அவனுடன் வேறு சில முரடர்களும் துணை வந்தனர். கை கலப்பு ஏற்பட்டது. இந்திரஜித்தை நையப் புடைத்தான் வேலப்பன். அவனுக்கும் நல்ல அடி. சற்று நேரத்தில் அமுதவல்லியைக் காணவில்லை. டிரைவர் திண்டாடிப் போனான் . நல்ல அதிர்ஷ்டம்போன்று ஒரு பர்லாங் தொலைவில் ஹோட்டல் ஒன்று இருந்தது. அங்கு போய் அமுதா விலாசத்துக்கு ட்ரங்க்கால் பேசி, நடந்த கூத்தைச் சொன்னான். பெரிய பட்டாளமே வந்தது. பேச்சு மூச்சற்றுப் போன அமுத வல்லியை வேலப்பன் கைத் தாங்கலாகப் பற்றியவாறு ஒரு மறைவிடத்தில் படுக்க வைத்து அவளுக்குச் சுயப் பிரக்ஞை வரச் செய்த ரகசியம் அப்புறம் அம்பலமானது!

‘'வேலப்பன் வேஷத்தை நான் நிதமும் நினைச் சுப் பார்க்கத் தான் வேண்டி வரும், மச்சான்!”

“மெய்தான். நான் வேலப்பனாய் மாறாமப் போயிருந்தா, இந்திரஜித்தின் கபட நாடகத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/36&oldid=1663457" இலிருந்து மீள்விக்கப்பட்டது