பக்கம்:அமுதவல்லி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 35 __________________________________

அறிஞ்சுக்கிட்டிரிக்க வாய்ச்சிருக்குமா...? அவனுக்கு இருந்த பல கெட்ட தொடர்புகளுடன் திருப்திப்படாமல், உன்னையும் கெடுத்துப்பிட்டு, அப்பாலே நடு வழியிலே கை நழுவ விட்டுப்பிட வேணும்னு கொண்டிருந்த அந்தரங்கத்துக்கான துப்புத்தான் துலங்கியிருக்குமா?’ என்று முன் மொழிந்து, அதற்கு வக்கணையாக ஓர் உறையை நீட்டினான் அவன்.

"பிரியமுள்ள தர்மு!

    நீ கோபப்பட்டாயாம்: தாபப்பட்டாயாம். நீ பைத்தியக்காரி. நான் நடிகன். இதை மறந்து விடு கிறாயே நீ? ஆனால் உன்னிடம் மட்டும் நான் நடிக்க முடியுமா? எனக்கு வாய்த்த முதற் காதலியாயிற்றே நீ? அமுத வல்லி அழகின் சிகரம். அவள் என் கனவு களிலே அங்கம் குலுங்கிட நாட்டிய மாடுகிறாள். என் ஆசைக்கு ஏற்ப, அவளே என்னைப் பிடிக்க வலைவீசி வருகிறாள். அவளிடம் உள்ள பணம் எனக்கு ஒரு பொருட்டல்ல. அவள் அழகு தான் எனக்குக் குறிப்புப் புள்ளி, என் சபலம் தீர்ந்து விட்டால் போதும். அதற்காகவே என் நாடகம். இதைப் பற்றி நீ கிஞ்சித்தும் சங்கடப்படாதே.
                   இப்படிக்கு, 
                   உன் காதலன்
                   இந்திரஜித்.”
   அந்த மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை, அமிர்தயோகம் கூடிய சுபயோக சுப தினமாக இருப் பதாகச் சோதிடர் தெரிவித்த தகவலை சோமலிங்கம் கிழவியிடம் சொன்னான். பொக்கை வாயை அகலத் திறந்து அதில் சிரிப்பை ஏந்திப் பிடித்த வண்ணம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/37&oldid=1378187" இலிருந்து மீள்விக்கப்பட்டது