பக்கம்:அமுதவல்லி.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 அமுதவல்லி

மகளிடம் சென்றாள் அவள். விவரத்தை விளக்கினாள். முகூர்த்தத்தை எப்ப கண்ணு வச்சுக்கிடலாம்?’ என்ற கேள்விக் கொக்கியை அவள் மண்டையில் மாட்டினாள்.

“யாருக்கு ஆத்தா முகூர்த்தம்?’ என்று ஆச்சரியக் குறியை அதரங்களுக்கு மத்தியில் எழுதிக் காட்டினாள் திரையுலக நட்சத்திரம் அமுதவல்லி.

ஒனக்கேதான்!”

‘நல்லாச் சொன்னிங்களே? ஆத்தா ! இந்திரஜித் என் உடலுக்கு ஆசைப்பட்டார். புரிஞ்சிக்கிட்டேன். ஆனா, நம்ம மச்சான் என்னோட உடமைக்குத் தான் ஆசைப்பட்டிருக்க வேணும். இல்லாட்டி, இப்படிப்பட்ட வகையிலே வேஷம் போட்டிருப்பாங்களா? என்னோட மனசை விரும்பியிருந்தா, அதை நிரூபிச்சுக் காட்டியிருக்கலாமே? ஆத்தா, நான் சொல்லுறதைப் பொறுமையாய்க் கேட்டுக்க, பணத்தைக் கொடுத்து மச்சானை அனுப்பிப்பிடுறேன். எனக்கு இந்தப் பகல் வேஷப்பிழைப்பே வெறுத்துப்போச்சு. பேசாம, பழைய காத்தாயியாவே மாறிடலாம் போல இருக்குது!’ என்று குறைபட்டுப் பேசினாள் அமுதவல்லி. அவளது விழி நீரும் பேசியது.

அப்போது, பையன் ஒருவன் ஓடிவந்து ஜரிகை வேஷ்டி, சட்டை அடங்கிய மூட்டை ஒன்றை அவள் கையில் ஒப்படைத்தான். அதில் துண்டுக் கடிதம் இருந்தது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/38&oldid=1375360" இருந்து மீள்விக்கப்பட்டது