பக்கம்:அமுதவல்லி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. பிறந்த பொன்னாடு!

அடுப்பில் பூனை தூங்கிக் கொண்டிருக்கிறது! சல் லாபமான தூக்கம். அடங்கிக் கிடந்த சாம்பல் பள்ளம் அந்தப் பூனைக்கு வெகு உணக்கையாக இருந்திருக்க வேண்டும். வாடை புந்தான் அற்ப சொற்பமாகவா அடித்துத் தொலைக்கிறது பின் பூனையைக் குறை சொல்லத் தகுமா, என்ன? வீட்டுப் பூனை அது. முண்டன் மகன் தேடி வந்து கொடுத்தான், புரட்டாசிக் கெடுவில் அம்பைப் பூ நிறம் துளி ஒச்சம் இருக்க வேண்டுமே? திருஷ்டி பரிகாரத் துக்கென்றாவது அசந்து மறந்து ஒரு கரும்புள்ளியைச் சூடிக்கொண்டிருக்காதா? ஆஹா! அந்த மீசை நீட்டி விட்டவெள்ளிக் கம்பிபோல எவ்வளவு எடுப்பாக இருக்கிறது! (ஆமாம், சூடேறியும் சூடேற்றியும் வருகிற இந்த நவநாகரிக யுகத்திலே பூனை மீசை ஃபாஷன்” மட்டிலும் ஏன் தான் இன்னமும் அரும்பு விடவில்லையாம்?...! -

வெள்ளை’ படு சமர்த்து. இல்லாவிட்டால், அது கண் வளர்வதற்கு இந்த அடுப்பை சயனக் கிரமாகப் பொறுக்கியிருக்குமா? மீனாட்சி அடுப்பு மூட்டவில்லை என்கிற துப்பைக் கண்டு கொண்டு தான் இப்படி அடித்துப் போட்ட மாதிரி உறங்குகிறது போலும்! எத்தனை எலிகளை எங்கெங்கே அடித்துப் போட்டதோ, பாவம்! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/40&oldid=1375367" இலிருந்து மீள்விக்கப்பட்டது