பக்கம்:அமுதவல்லி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமுதவல்லி

சுப்பையாவுக்குக் குழந்தைகளின் ஞாபகம் பீறிட்டிருக்க வேண்டும். உள்மனம் விம்மிப் புடைத்தது, உள்வட்டமாக ஏக்கமும் வேதனையும் சுற்றிச்சூழ, அவன் பார்வை பானையில் பதிய, நடுங்கும் கைகளைப் பானைக்குள் நுழைத்தான். ஒரு பிடி கஞ்சிப் பருக்கைக்கூட தட்டுப்படக் காணோம்! நீராகாரத் திற்கு மாத்திரம் துட்டு இல்லை. பெருமூச்சு நெளிந்தது.

சற்று முன்னே மிச்சம் சொச்சம் இருந்த கஞ்சியை வார்த்துக் கொண்டு சாப்பிட்டு விட்டு விளையாடப் போய்விட்டாள் சின்னக்குட்டி. அமுதாவுக்கு ஒரு நாளைக்குப் பத்துவாட்டி கஞ்சி அல்லது சோறு வேண்டும். இல்லாவிட்டால் லூட்டிதான் ; ரோதனைதான். பழசுபட்டதைத் தொட்டுக் கொண்டு உண்டு முடித்து ஒழுங்கைக்கு ஓடிவிடுவாள் விளையாட விளையாட்டுத்தான் சதம் அவளுக்கு,

மூத்தவன் காமராஜ் ஸ்கூலுக்குப் போய்விட்டான். மூன்றாம் வகுப்பு. கொஞ்ச நேரத்துக்கு முந்தி அவன் ஒட்டமாக ஓடி வந்து என்ன பாடு படுத்திவிட்டான்!- ‘நம்ப நாட்டைப் பாதுகாக்கிற துக்காக வாத்தியார் ஐம்பது காசு வாங்கிட்டுவரச் சொன்னார், அப்பா!’ என்றான்.

அவன்-சுப்பையா எங்கே போவான் ஐம்பது காசுக்கு கொஞ்ச நஞ்சம் ஒட்டியிருந்த ரத்தம் பாவ புண்ணியத்திற்கென்று ஒட்டியிருத்த அந்த ரத்தம்கூட இப்போது உறைந்து விடும்போல பூச்சாண்டி காட்டியது.பிறந்த பொன்னாட்டைக் காத்திட கையில் மடியில் இருப்பதைத் தாராளமாகக் கொடுக்க வேண்டியதுதான்!- அது நம் கடமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/42&oldid=1375375" இலிருந்து மீள்விக்கப்பட்டது