பக்கம்:அமுதவல்லி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 41

தான்! அறமே வெல்லும் என்கிற நித்தியச் சத்தியத்திற்குச் சான்று பகருவது மாதிரி, வீரபாரதத் திடம் பாகிஸ்தான் சரணடைந்த கதை அவன் இதயத்திரையில் சலனச் சித்திரமாகப் படம் காட்டத் தொடங்கியது. அவன் சுயப் பிரக்ஞையை மீட்டுக் கொண்டு தலையை நிமிர்த்திய நேரத்தில், தன் பல்லவியைப் பாடத் தொடங்கி விட்டான் வாண்டுப்பயல்.

“அப்பா, காசு கொடுங்க!”

“சுப்பையா தன் அருமைப்பிள்ளையை ஏறெடுத்து நோக்கினான். என்ன வகை செய்வான்? என்ன பதில் சொல்லுவான்? அவன் பார்வை அவனது இன்னுயிர்த் துணை யின் பால் பரிந்தோடியது.

அம்மா பக்கம் திரும்பி, நீ யாச்சும் காசு கொடம்மா. நம்ப நாட்டைப் பாதுகாக்கிற கடமை யிலே நம்ப பங்கையும் நாம் செலுத்திப் புட வேணாமாம்மா?’ என்றான்.

அவள் சிந்தனை வசப்பட்ட நிலையில், “ஆமாம். என்ற பாவனையில் தலையை வசமாக உலுக்கினாள். பிறகு பரிதாபமாக மகனை நோக்கலானாள். “காசு. இப்போ கைவசம் இல்லையேடா, கண்ணே இருந்திருந்தால் இந்நேரம் அடுப்பு புகையாமல் இருந்திருக்குமாடா?’ என்றாள். தங்கைக்கென்று கொஞ்சத்தை வைத்துவிட்டு, நாலு கொத்துக் கஞ்சியைத் தட்டில் போட்டுக் கொடுத்துச் சாப்பிடச் செய்து அவனைக் காலையிலே பள்ளிக்கு அனுப்ப வில்லையா அவள்?

அ-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/43&oldid=1375381" இலிருந்து மீள்விக்கப்பட்டது