பக்கம்:அமுதவல்லி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 அமுதவல்லி

“நாட்டைப் பாதுகாக்கவேண்டியது நம்ப பொறுப்பு இல்லையா அம்மா ?”

கண்ணே இல்லேன்னு சொன்னது? அது நம் கடமையாச்சே!”

  • பின்னே, காசு கொடேன்!’

விழி பிதுங்க, கொண்டவனை ஊடுருவினாள் மீனாட்சி.

“நாளைக்குக் கொடுத் திடலாமப்பா. இப்போ காசு இல்லையே என்ன செய்வது? திடுதிப்னு எங்கே போய் கடனோ கைமாற்றோ வாங்க முடியும்? நமக்குத்தான் அந்த மாதிரிப் பழக்கமும் கிடையாதே?. அப்பாவுக்கு உடம்புக்கு வந்தது தொட்டு இந்த நாலைஞ்சு மாசமாக எவ்வளவு பாடுபட்டுக் குடும்பத்தை நடத்த வேண்டியிருக்குது? நம்ப கஷ்ட நஷ்டம் நம்ப வீட்டுச் சுவர்களைத் தாண்டி வெளியே தடம் காட்டிடப்படாதேன்னு தானே நாம இம்புட்டு மானமாய் காலங்கடத்திட்டு வரோம்:இந்தத் துப்பு உனக்கு இன்னமுமா விளங்கலே?... நம்ப தாய் மண்ணைக் காக்கிறதுக்காக பாதுகாப்பு நிதிக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கத் தான் துடிக்குது என் மனசும்.அம்மா மனசும்!,. ஆனா, மாரியாத்தா இந்தச் சமயத்திலே இப்படிச் சோதனை செய்கிறானேயா அதுக்கு என்ன செய்யட்டும் நாங்க! சுப்பையாவின் தொண்டை அடைபட்டது. இருமல் அடைபடவில்லை.

அதெல்லாம் எனக்குத் தெரியாது. இப்போ எனக்கு அம் பது காசு வேணுமாக்கும் இல் லாட்டி...’ என்று தொக்கு வைத்து அழத் தொடங்கினான். அவனுடைய மாமூலான கடைசி அஸ்திரம்: ரோசம் எப்படி வருகிறது:
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/44&oldid=1375383" இலிருந்து மீள்விக்கப்பட்டது