பக்கம்:அமுதவல்லி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமுதவல்லி

பது காசு இருக்கு. நான் போயிட்டுவாரேன் அம்மா. நான் போய் வாரேனுங்க அப்பா!’ என்று துள்ளிக் குதித்தபடி ஒடலானான். அவனா விளையாட்டுப் பிள்ளை?

இந்தச் சின்னப் பிள்ளைக்குத் தான் நாட்டின் பேரிலே எம்மாம் அக்கறை என்று பான்மை பூண்டு புன்னகை செய்தாள் மீனாட்சி.

வாஸ்தவம் தான்!” என்று பெருமையோடு ஆமோதித்தான் சுப்பையா. பெருமையில் பெருமிதம் சுடர் தெறித்தது.

“எழுதிக்கிடந்தால், நம்ப பயல் மணி தான்!” என்றாள் அவள். -

‘காமராஜ் பிழைச்சுக் கிடந்தால், உனக்குப் பயமே கிடையாது. மீனாட்சி! அவனுடைய வெளுத்த உதடுகள் துடித்தன.

அன்புக் கணவனை ஏக்கத்தோடு ஊடுருவினாள் மனைவி. மங்களம் பொலிந்த மஞ்சள் முகத்தில் கலவரம் சோக மேகமெனச் சூழ்ந்தது. அவன் பிழைச்சுக் கிடக்கட்டுமுங்க, அத்தான். அவன் பிழைச்சும் கிடப்பான்! சீரான வாழ்வுக்கு இந்த ரெண்டு செல்வங்களே போதுமின்றி திட்டமிட்டு முடிவு கட்டி மதிச்சு வாழ்கிற நம்பளோட பிரார்த்தனையைக் கட்டாயம் ஆத்தா மகமாயி ஈடேறச் செஞ்சிடுவாள். அந்த நம்பிக்கை உங்களுக்கு மட்டுமில்லை, எனக்கும் ரொம்பவும் உண்டுங்க. ஆனால் ஆனால்...? அவள் என்னவோ வாயெடுக்கத் துடித் தாள். ஆனால் சொற்கள் கூடினால் தானே?

சுப்பையா தன்னுடைய அழகான சுருட்டை முடிகளைக்கோதி விட்டபடி மீனாட்சியை ஆழ்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/46&oldid=1375406" இலிருந்து மீள்விக்கப்பட்டது