பக்கம்:அமுதவல்லி.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம்

நோக்கினான். அவளுடைய அன்பு மிக்க மார்பகத்தில் இழை ந்திருந்த அந்த மஞ்சள் தாலியை ஆதரவுடன் பற்றிக் கண்களிலே ஒற்றிக் கொண்டாள்; ஈரம் சுற்றியது. மீனாட்சி நம்பமகன் பிழைச்சுக்கிடந்தால் உனக்குப் பயமே இல்லைன்னு நான் சொன்னதை மனசிலே வச்சும்று குறியா ?- அவன் கெட்டிக்காரன். பிழைச்சுப் பெரியவன் ஆயிட்டா உன்னை அன்போடு காப்பாற்று வான், இல்லையா? அதை நினைச்சுத் தான் நான் இயல்பாய்ச் சொன்னேன். ஆனா நீயோ வேறே எதையோ நினைச் சுக்குமைகிறே! நான் தஞ்சாவூரிலேயும் சரி, இந்தப் பூவை மாநகரிலேயும் சரி, அடிக்கடி உன்கிட்டே சொல்லுற தில்லையா. நாம் நல்லதையே நினைக்கப் பழகிக்கிடனும் னு?... அது மாதிரி. நாம் நல்லதே நடக்கும் என்கிற ஒரு பரிசுத்தமான வைராக்கியப் பண் போடே காலத்தை தன்னம்பிக்கையோடு ஓட்டு வோம்! நீ பயப்படுறாப்பிலே என் உயிருக்கு ஒரு பயமும் இனி மேல் இல்லவே இல்லை, மீனாட்சி! ஆண்டவன் நம்மோ - நியாயமான பிரார்த்தனை களையும் நேர்மையான கன வுகளையும் கருணையோட செவிசாய்க்காமல் இருக்கவே மாட்டான் என்னை நம்பு, மீனாட்சி!’ -

உணர்ச்சிப் பெருக்குடன், பேசினான் சுப்பையா.

உங்களை நம்பாமல் இந்த மண்ணிலே நான் வேறே. யாரைத்தானுங்க நம்புவேன், அத் தான்?” என்று விம்மினாள் , சுப் பையாவுக்கு உடையது மீனாட்சி,

நெஞ்சைத் தடவி விட்டுக் கொண் டான் அவன்!

என்னவோ சத்தம் கேட்டது. எலிப்பண்ணை மீண்டும் படையெடுத்து விட்டதோ? கையிலும் காலி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/47&oldid=1375412" இருந்து மீள்விக்கப்பட்டது