பக்கம்:அமுதவல்லி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 அமுதவல்லி

லுமாக இடமாய்த்துக் கொண்டிருந்த எலிப்படைகள் வெள்ளை’ வந்த நாளாக எங்கே தான் அஞ்ஞாத வாசம் செய்கின்றனவோ?-சனியன்கள்! சுப்பையா பானையடியினின்றும் மெதுவாக எழுந்தான். நீராகாரம் வேண்டவில்லை. மனம் நிம்மதியைப் பறிகொடுக்கும்போது, எதுதான் சுவாதினமாகப் படுகிறது? வேதனைப் பெருமூச்சோடு திண்ணைக்கு நடந்தான். காலை யில் அடுப்பைப் பற்றவைக்காமல் பிரமை பிடித்து அமர்த்து விட்ட துணைவியிடம், மீனாட்சி, இரண்டொரு நாளிலே நான் பிழைக்கப் போயிட்டதாக முடிவு செஞ்சிட்டேன். இனியும் உன்னையும் நம்புளோட ரெண்டு தங்கங்களையும் சோதிக்கிற துக்கு என் மனச்சாட்சி ஒப்பவே ஒப்பாது! விதிக்குப் பசி எடுக்குமோ, எடுக்காதோ? ஆனா, பசிக்கு விதி ஏது?’ என்று ஒரு தீர்மானச் செறிவுடன் அவன் உரைத்த முடிவும் அக் கணம் அவன் நினைவுகளிலே வைராக்கிய முத்திரை பதித் ததை அவனால் மறந்து விட முடியாதல்லவா? பூனை விழித்துக் கொண்டது.

அடுப்பு எப்போது விழித்துக் கொள்ளுமோ?

பழைய ஞாபகத்தில் இடதுகை மணிக்கட்டைத் திருப்பினான் அவன் பிறகு, வேதனை மல்க வெயிலைக் கவனித்தான். முற்றத்துக் கீழ்ப்புற வாசலை நெருங்கிக் கொண்டிருந்த வெய்யில் அவனுக்குக் காலத்தைக் கணக்கிட்டுக்காட்டியது போலும்! மகன் இனி மத்தியானச் சாப்பாட்டுக்கு வந்து நிற்பானே? ...

“ஆத்தா!’ எங்கே போய் விட்டாள் மீனாட்சி?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/48&oldid=1375415" இலிருந்து மீள்விக்கப்பட்டது